யோகிபாபுக்கு திருமணம் முடிந்தது… கல்யாணத்தை பதிவு செய்ய போன யோகிபாபுக்கு நடந்த பிரச்சனை..!!

இவன்லாம் ஒரு ஆளுனு இவன் எல்லாம் நடிக்க வந்துட்டான், என்று யோகி பாபுவை கிண்டல் செய்தவர்களே அதிகம். காலப்போக்கில் அவர்களின் கண் முன்பே வளர்ந்து நிற்கிறார் யோகி பாபு. பேரு, புகழ், காசு , பணம் எல்லாம் சம்பாதிச்சாச்சு, அடுத்து எப்பொழுது திருமணம் என்று அனைவரும் யோகி பாபுவை கேட்டுக் கொண்டிருந்தார்கள்(விஜய் உட்பட ) கூடிய விரைவில் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று தலைவர் சொன்னார் என யோகி பாபு தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் – மஞ்சு பார்கவி என்பவருக்கும் குல தெய்வம் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் குறித்து வரும் செய்திகளை மறுத்து வந்த யோகி பாபு, சொல்லாமல் கொள்ளாமல் இன்று காலை திடீரென திருமணம் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருமணம் நிறைவடைந்தது குறித்தும், மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி குறித்தும் தெரிவித்துள்ளார்.

யோகி பாபுவின் திருமண புகைப்படத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போ இதுக்கு முன், யோகி பாபு முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது கல்யாணத்துக்கு முருகனிடம்
ஆசீர்வாதம் வாங்கத் தான் என்று கூறப்படுகிறது.

திருமணம் நன்றாக முடிந்து கல்யாணத்தை பதிவு செய்ய போன இடத்தில் அலுவலகம் திறக்கவில்லை, முக்கிய நபரை அழைத்தாள் அவர் நம்ம யோகிபாபுவை அலையோ அலை என அலகழித்து விட்டார், கடுப்பான யோகி அப்புறம் Register பண்ணிக்கலாம் என்று வந்துவிட்டார். “திருட்டு கல்யாணத்துக்குலாம் Register பண்ணுவான், எனக்கு மட்டும் பண்ணமாட்டானா” என்று செம்ம கடுப்பில் உள்ளார் நம்ம யோகி பாபு.

Advertisements

Next Post

இதுவரை வெளிப்படுத்தாத கவர்ச்சி...உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நடிகரை கட்டி அணைத்தபடி ராய் லட்சுமி... !

Wed Feb 5 , 2020
இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் […]

Actress HD Images

%d bloggers like this: