பல இளம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடியவர்..என பிரபல ஹீரோ மீது நடிகை “ஶ்ரீரெட்டி” மீண்டும் பரபரப்பு புகார்..

பிரபல ஹீரோவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார், சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி. சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி. இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில தெலுங்கு நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார் ஶ்ரீரெட்டி. தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்தார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோவும் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் பற்றி மீண்டும் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுபற்றி தெலுங்கு பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன. அதில், ஶ்ரீரெட்டி கூறியிருப்பதாவது: என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் (பவன் கல்யாண்) வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. பல இளம்பெண்களை கர்ப்பமாக்கியுள்ளீர்கள்.

நான் ஐதராபாத்தில் ஏற்கனவே இருந்த வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வந்து செல்கிறேன். உங்கள் குடும்பத்தைக் கண்டும் ரசிகர்களை கண்டும் சென்னைக்கு ஓடிவிட்டதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன், பவன், பல பெண்களுடன் விளையாடியவர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இப்போது அவரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் புகார் கூற இருக்கிறார்கள். இன்னும் சிலரும் வெளியே வருவார்கள். உங்களால் ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சராக முடியாது. ஏன், பஞ்சாயத்து தலைவராக கூட ஆக முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார். இந்த புகார் தெலுங்கு சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

அந்த நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை... உடனே ஓகே சொன்ன மற்றொரு பிரபல நடிகை.. உயர்ந்த சம்பளம்..புலம்பும் நடிகைகள்..!!

Tue Dec 31 , 2019
மூத்த நடிகருடன் நடிக்க உடனே ஓகே சொன்ன நடிகைக்கு படக்குழு சம்பளத்தையும் உயர்த்தியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் அண்மையில் ரூலர் என்ற படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் நடிகை வேதிகா, பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார்.இந்நிலையில் பாலகிருஷ்ணா தற்போது யோயபதி ஸ்ரீனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் […]

Actress HD Images

%d bloggers like this: