நாய்க்காக பைக்கை திருப்பியதால் விபத்து… இளம் இயக்குனர் விபத்தில் பலி.. திரையுலகினர் அதிர்ச்சி..

பைக் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார். அசோகன், பபிதா பஷீர், ஜேம்ஸ் உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ஓர்மயில் ஒரு ஷிஷிரம். இந்தப் படத்தை இயக்கி இருந்தவர் விவேக் ஆர்யன். இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் பணியாற்றிய விவேக், அவரது புகழ்பெற்ற த்ரிஷ்யம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னர் மெமரிஸ் என்ற படத்திலும் பணியாற்றினார்.

தமிழில் சில குறும்படங்களை இயக்கியுள்ள விவேக் ஆரியன், அடுத்த படம் இயக்குவதற்கான முயற்சியில் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி, தனது மனைவி அம்ருதாவுடன் திருச்சூர் அருகிலுள்ள கொடுங்கல்லூரில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று வண்டியின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. இதற்காக வண்டியை திருப்பினார். அப்போது எதிர்பாராமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலையிலும் அம்ருதாவின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரும் கொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆர்யன் விவேக் நேற்று பரிதாபமாக பலியானார். அவரது மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வளர்ந்துவரும் ஒரு இயக்குனர் விபத்தில் மரணமடைந்தது மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

பதுங்கி இருந்த ஜீவா..! சீறுவது எப்போ..? 'சீறு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதிஅறிவிப்பு...

Wed Jan 8 , 2020
ஜீவா கதாநாயகனாக நடிக்கும் ‘சீறு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க’ திரைப்படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சீறு’. இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இண்டெர்னேஷ்னல் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். அதெபோல், ஜீவாவுக்கு வில்லனாக ‘அறிந்தும் அறியாமலும்’ நவ்தீப் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். கடைசியாக ‘கொரில்லா’ […]
%d bloggers like this: