மின் விசிறியில் தூக்குப் போட்டு இளம் நடிகை தற்கொலை…

சென்னையில் இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் வசித்து வந்தவர் பத்மஜா (23). துணை நடிகை. இவர் வசித்த வீட்டின் கதவு நேற்று அதிக நேரமாகியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தார்.

அப்போது மின் விசிறியில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், கதவை உடைத்து சென்று பத்மஜாவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பத்மஜா தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோவை பெங்களூரில் உள்ள தனது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். அதில் அவர் கண்ணீர் விட்டு கதறியபடி தற்கொலை செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பத்மஜாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பத்மஜா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூருக்கு வந்துள்ளார். பத்மஜாவின் கணவர் பவன். இவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் இருக்கிறான். சினிமாவிலும் விளம்பர படங்களிலும் துணை நடிகையாக நடித்துவருவதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார் பத்மஜா.

கடந்த மாதம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பவன் ஆந்திரா சென்றுவிட்டார். பத்மஜாவின் உறவினர் குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டார். இதையடுத்து உறவுக்கார வாலிபருடன் வசித்து வந்துள்ளார். கணவர் இல்லாமல் வீட்டில் இருக்க வேண்டாம் என்றும் வீட்டை காலி செய்யுமாறும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அவருடன் தங்கியிருந்த வாலிபரை காணவில்லை. இதையடுத்து பத்மஜாவின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

குட்டி தல "ஆத்விக்" பிறந்தநாளை கொண்டாடிய அஜித் குடும்பம் - வைரல் வீடியோ..!!

Mon Mar 2 , 2020
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் கோடான கோடி ரசிகர்களின் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார். கார் ரேஸ், பைக் ரேஸ் , துப்பாக்கி சுடுதல் என தனக்கு விருப்பமான அத்தனை துறைகளிலும் மிகுந்த கவனத்தை செலுத்தி வரும் அஜித் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். அஜித்திற்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மகன் ஆத்விக் இன்று தனது […]
%d bloggers like this: