சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு..!!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் திடீரென இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் ‘மாநாடு’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் யுவன்ஷங்கர் ராஜா, ‘மாநாடு’ திரைப்படத்திற்கு தான் இசையமைப்பதாக கூறி வெங்கட்பிரபுவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். எனவே ‘மாநாடு’ படத்திற்கு யுவன் இசையமைக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
அரசியல் மற்றும் ஆக்சன் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கப்பட்டு மே மாதம் முடியும் என்றும் அக்டோபர் அல்லது நவம்பரில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisements

Next Post

'சூரரை போற்று’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்... 'டீசர்' வெளியாகும் தேதி அறிவிப்பு ..!!

Mon Jan 6 , 2020
நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்து சூர்யா ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின்டீசர் வரும் 7-ம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி […]

Actress HD Images

%d bloggers like this: