தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..!!எண்ணிக்கை 7ஆக உயர்வு..

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டிருந்த நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவர், நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்த ஒருவர் என நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ஒருவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் என இன்று மட்டும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

பிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா? தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..!!

Sun Mar 22 , 2020
பிரபல இயக்குனர் மணிரத்தினம் மகன் நந்தன் கடந்த ஐந்து நாட்களாக தனிமையாக இருப்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற வதந்தி பரவி வருகிறது. இது குறித்து வீடியோ ஒன்றை நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார். தனது மகன் நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பி வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவருடைய பாதுகாப்பு மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த […]
%d bloggers like this: