இந்தியா – தென் ஆப்ரிக்கா: முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி… இவரும் விளையாட போகிறாரா?

இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, தர்மசாலாவில் இன்று நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.

தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியில் இளம் வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்க அணியின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது.

டூ பிளசிஸ், ஹெய்ன்ரிச் கிளாஸன், கைல் வெர்ரைன் நல்ல பார்மில் உள்ளனர். பெலுக்வாயோ, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்க வாய்ப்புள்ளது.

Advertisements

Next Post

நடிகை "அமலா பால்" பிரபல பாடகரை காதலிக்கிறாரா? புகைப்படங்கள் வைரல்..!!

Thu Mar 12 , 2020
அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் உடையில்லாமல் நடித்து அனைவரையும் அதிர வைத்தார் அமலா பால். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது தன் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளதாக அமலா தெரிவித்தார். மேலும் அந்த உண்மை காதல் தன் காயங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளதாகவும், காதலர் […]
%d bloggers like this: