ஏன் மங்குனி அமைச்சரே.. அப்படீன்னா 24ம் புலிகேசி யாராக இருக்கும்.. உமக்கு ஏதாவது புரிகிறதா?

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் நாயகனை படக்குழு மாற்றம் செய்துள்ளது. லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் உருவாகவிருந்த படம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’. இயக்குநர் சிம்புதேவன், நடிகர் வடிவேல் இடையே பிரச்சினை எழுந்ததால் இந்த படம் பாதியில் நின்றது. இதனால் 10 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டதாக ஷங்கர் அளித்த புகார் காரணமாக, வடிவேலுவுக்கு தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக படம் நடிக்காமல் இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் தரப்பும், வடிவேலு தரப்பும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடிவேலுக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரை வைத்தே இம்சை அரசன் 24ஆம் புலிகேசி எடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அதில் வடிவேல் நடிக்கவில்லை என்பதால் யாரை இம்சை அரசன் 24ஆம் புலிகேசியாக யாரை நடிக்க வைக்கப் போகிறார்கள் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. வடிவேலு நடிக்காத காலத்தில் காமெடி நடிகர்களாக பீக்குக்கு வந்தவர்கள் சந்தானமும் சூரியும் தான்.

சந்தானம் கொஞ்சம் மார்டன் யூத். ஆனால் நடிகர் சூரி வடிவேலுவை போல வில்லேஜ் ஸ்லாங்கில் பேசுவதிலும் காமெடி செய்வதிலும் வல்லவர். உடல் வாகும் கூட ஓரளவுக்கு வடிவேலுவை ஒத்தே இருக்கும். ஆகையால் சூரி நடிக்கலாம். அல்லது வேறு யாரெனும் புது முகத்தைக் கூட அறிமுகப்படுத்தலாம் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

Source: FilmiBeat Tamil

Advertisements

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

இது என்னடா நயன்தாராவுக்கு வந்த சோதனை: வருத்தத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

Fri Aug 2 , 2019
A young woman with a speech disability finds herself stranded in a mansion haunted by a series of gruesome killings. With the dangerous murderer still lurking in the shadows, will she be the next victim?
%d bloggers like this: