நினைவு நாளில் இப்படியொரு பேரணி- தமிழ் பேசும் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் முத்துவேல் கருணாநிதியாகிய நான்…

திரைக் கலைஞர், அரசியல் வித்தகர், இலக்கியவாதி என பன்முகங்கள் கொண்ட தலைவர் கருணாநிதி. தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். காலத்தால் அழிக்க முடியாத ஏராளமான படைப்புகளை தமிழ்ச் சமூகத்திற்கு அளித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் தம்பியாக, எம்.ஜி.ஆரின் உற்ற தோழனாக, மு.க.ஸ்டாலினிற்கு ஆசானாக இருந்தவர். அண்ணாவின் மறைவிற்கு பின், திராவிடக் கழகத்தை முன்னின்று வழிநடத்தினார்.
இவர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். இவரது உடல் மறைந்தாலும், காலத்தால் அழியாத எண்ணிலடங்கா விஷயங்களை தந்துவிட்டு சென்றுள்ளார். இவரது முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி திமுகவினர் சென்னையில் அமைதி பேரணி நடத்தினர். வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடம் வரை சென்றனர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
மேலும் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், திமுக எம்.பிக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் சென்னை ததும்பும் அளவிற்கு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இறுதியாக கருணாநிதி நினைவிடத்தில் திமுகவினரும், பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Author: T J Akkini

Advertisements

Next Post

Permanent Weight Loss Tips in Tamil | Weight Loss | Detox | Episode: 21

Wed Aug 7 , 2019
Advertisements
%d bloggers like this: