டெல்லி கண்ட 2- வது பெண் முதல்வர் உயிரும் மாரடைப்பால் பிரித்தது…7 முறை மக்களவை எம்.பி; டெல்லி முதல்வர்’ – சுஷ்மா ஸ்வராஜ்!

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர், இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பா.ஜ.க பதவி ஏற்றபோது, உடல்நிலை பாதிப்பு காரணமாக அமைச்சர் பதவியை மறுத்தார்.

டெல்லி ஜன்பத் பகுதியில் வசித்து வந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி சற்றுநேரத்தில் உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் மருத்துவமனையில் திரண்டனர். நள்ளிரவில் அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


சுஷ்மா வீட்டருகே உள்ள ஜந்தர் மந்தரில் 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக சுஷ்மா உடல் வைக்கப்படும். அதன்பிறகு பா.ஜ.க. தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவார்கள். பிற்பகல் 3 மணிளவில் லோதிரோடு மின்மயானத்தில் சுஷ்மாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுஷ்மாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பொதுவாழ்வில் கண்ணியம், நேர்மை, தைரியத்துடன் விளங்கியவர் என்றும், எப்போதும் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜ் பொதுவாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டு, தலைசிறந்த நிர்வாகியாகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தார் என்றும், அவரது மறைவின் மூலம் இந்திய அரசியலின் புகழ்மிக்க ஒரு அத்தியாயம் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுஷ்மாவின் மறைவு தமக்கு தனிப்பட்ட இழப்பு என்றும் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Author: T J Akkini

Advertisements

Next Post

நினைவு நாளில் இப்படியொரு பேரணி- தமிழ் பேசும் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் முத்துவேல் கருணாநிதியாகிய நான்…

Wed Aug 7 , 2019
திரைக் கலைஞர், அரசியல் வித்தகர், இலக்கியவாதி என பன்முகங்கள் கொண்ட தலைவர் கருணாநிதி. தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். காலத்தால் அழிக்க முடியாத ஏராளமான படைப்புகளை தமிழ்ச் சமூகத்திற்கு அளித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் தம்பியாக, எம்.ஜி.ஆரின் உற்ற தோழனாக, மு.க.ஸ்டாலினிற்கு ஆசானாக இருந்தவர். அண்ணாவின் மறைவிற்கு பின், திராவிடக் கழகத்தை முன்னின்று வழிநடத்தினார். இவர் உடல்நலக்குறைவு […]

You May Like

%d bloggers like this: