ட்ரூகாலர் குறைபாடு! 100மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளின் கதி என்ன?

Advertisements

உலகின் மிகப்பெரிய காலர் ஐடி செயலியான ட்ரூகாலர்-ல் சீட்டா மொபைல் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தனியுரிமை குறைபாட்டை கண்டறிந்துள்ளனர். இந்த குறைபாட்டின் காரணமாக நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் உள்ளன.

சீட்டா மொபைல் நிறுவனம் அதன் அறிக்கையில் இதுகுறித்து கூறுகையில், ட்ரூகாலர் அதன் பயனர்களுக்கு அடையாளங்களை ஒதுக்குவதற்கு அவர்களது சாதனத்தின் IMEI எண்ணை பயன்படுத்துகிறது. அதாவது ஒரு மொபைல் சாதனத்தின் IMEI எண்ணை அணுக முடிகின்ற எவரும் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் உங்கள் தனிப்பட்ட தகவல்களுடன் மோசடி செய்ய முடியும்.

இந்த பாதுகாப்பு குறைபாட்டை தவறாக பயன்படுத்துவதன் மூலம் “கணக்கு பெயர், பாலினம், மின்னஞ்சல், சுயவிவரப் படம், வீட்டு முகவரி” போன்ற விவரங்களைத் திருடவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும். மேலும் ஹேக்கர்களால் பயன்பாட்டு அமைப்புகளை மாற்ற இயலும், ஸ்பேம் பிளாக்கர்களை முடக்க முடியும் மற்றும் பயனர்கள் கருப்புபட்டியலை மாற்ற அல்லது நீக்க முடியும்.

ட்ரூகாலர் செயலி விரைவாக இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து ஆராய்ந்து பிழையை சரி செய்துள்ளது. ஆனாலும் பயனர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட செயலின் சமீபத்திய பதிப்பை அப்டேட் செய்ய வேண்டும்.

ட்ரூகாலர் நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த பாதிப்பின் விளைவாக இதுவரை “எந்தவொரு பயனர் தகவல்களும் சமரசம் செய்யப்படவில்லை” என கண்காணிப்பு பகுப்பாய்வு குறிப்பிடுகிறது என தெரிவித்துள்ளது.

Source: OneIndia Tamil

Advertisements

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

பிக்பாஸில் லாஸ்லியாவின் 96 பட கெட்டப்- திரிஷா கொடுத்த ரியாக்ஷன்

Thu Aug 1 , 2019
திரிஷா நடித்த படங்களில் அண்மையில் படு ஹிட்டடிட்ட படங்களில் 96 படம். கல்லூரி கால காதலை காட்டும் இந்த படத்தில் தமிழ் மக்கள் அப்படியே மூழ்கிவிட்டார்கள் என்றே கூறலாம். படம் ஹிட்டை தாண்டி அப்படத்தில் திரிஷா அணிந்த உடை பல கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். 96 படத்தின் ஜானு வேடத்தை அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு கொடுத்திருந்தனர். அந்த கெட்டப்பில் அவருக்கு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர […]

You May Like

%d bloggers like this: