புதிய நேரடி வரி விதிகளில் நடுத்தர மக்களுக்கு வரிச் சலுகை

வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் புதிய நேரடி வரி விதிகள் வரைவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை 31ஆம் தேதியே புதிய நேரடி வரி விதிகளை நிதி அமைச்சகம் வெளியிட இருந்தது. ஆனால், அன்று வெளியாகவில்லை. சில நாட்கள் தாமத்துக்குப் பின், ஆகஸ்ட் 19ஆம் தேதி புதிய நேரடி வரி விதிகள் வரைவு நிதி நிதி அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நித அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனைப் பெற்றுக்கொண்டார். 

அகிலேஷ் ரஞ்சன் குழுவின் பரிந்துரையைப் நிதி அமைச்சகம் பரிசீலித்த பிறகு, பொது மக்கள் கருத்து பெற புதிய நேரடி வரி விதிகள் வரைவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான வருமான வரிச் சட்டம்1961-க்கு மாற்றம் காணும் நோக்கில், மத்திய அரசு புதிய நேரடி வரி விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது. இதனைத் தயாரிப்பதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக மத்திய நேரடி வரி வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். 

இந்தக் குழு சமர்ப்பித்துள்ள வரைவில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் தருவது, வரி தாக்கல் செய்யும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு வரி செலுத்துபவரும் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவும் பேசி தீர்வு காண்பது போன்ற அம்சங்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொதுவாக 25% வரி விதிக்கும் முறையும் இந்த வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில், 400 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள் 25 சதவீதம் வரி செலுத்துகின்றன. இதை விடப பெரிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் 30 சதவீதம் வரி செலுத்துகின்றன; இவைய அரசுக்கு அதிகமா வரி வருவாயைத் தருகின்றன. 

தனிநபர் வருமான வரி முறையிலும் முக்கிய மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் எனவும் நிதித்துறை வட்டாரத்திலிருந்து அறிய முடிகிறது. 

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை நடத்தி அதன் லாபத்தை அயல்நாட்டில் உள்ள தலைமையகத்துக்கு பலன் அளிக்கும் வகையில் செயல்படுவதைக் கட்டுப்படுத்த ‘கிளை லாப வரி’ (branch profit tax) என்ற புதிய வரி புகுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை தெரியவில்லை. 

2017ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு வரிக் குறைப்பு மற்றும் வேலைகள் சட்டம் (Tax Cuts and Jobs Act) என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. இது அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளை தொடங்குவதை ஊக்குவிக்கிறது.

Advertisements

Next Post

இந்தியாவில் ரூ.69,999/-க்கு அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி நோட் 10; Note 10 Plus-ன் விலை என்ன?

Tue Aug 20 , 2019
சமீபத்தில் அறிமுகமான சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள், இன்று அதன் இந்திய அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளது. லேட்டஸ்ட் கருத்துகள்அம்சங்களையும், விலை நிர்ணயத்தையும் பார்த்தால் இம்முறை சாம்சங் தனது வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்பது போல் தான் தெரிகிறது.rubyஅனைத்து கருத்துகளையும் பார்க்ககருத்தை எழுதவும்முதன்முறையாக இரண்டு தனித்துவமான மெமரி வேரியண்ட்கள், முதன் முறையாக புதிய SoC பயன்பாடு, முன் மற்றும் பின்புக்கத்தில் ஒரே மாதிரியான கேமரா அமைப்பு, Near-full screen […]

Actress HD Images

%d bloggers like this: