பெண்களின் உணர்வுகளோடு விளையாடும் கவின்.. வக்காலத்து வாங்கும் காஜல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் உணர்வுகளோடு விளையாடும் கவினுக்கு நடிகை காஜல் வக்காலத்து வாங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், நான்கு பேரை ஒரே நேரத்தில் காதலித்தால் கன்டென்ட் கிடைக்கும் என கூறி சாக்ஷி, அபிராமி, ஷெரின், லாஸ்லியா ஆகிய நான்கு பேரிடமும் ஒரே நேரத்தில் கடலை போட்டு வந்தார். கன்டென்ட் கொடுத்தால் நிகழ்ச்சியில் நீடிக்கலாம் என நினைத்த கவின் தனது சுயநலத்துக்காக நான்கு பெண்களின் உணர்வுகளோடு விளையாடினார். இதில் சாக்ஷியிடம் காதலை சொன்னார் கவின்.

சாக்ஷியும் கவினும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கவின் லாஸ்லியாவிடமும் கடலை போட்டு வந்தார். இதனால் கவின் மீது லாஸ்லியாவுக்கும் காதல் வந்துவிட்டது. ஆனால் லாஸ்லியா தனது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.

இதேபோல் கவினும் லாஸ்லியாவை காதலிக்கிறார். ஆனால் அவரும் வெளிப்படையாக சொல்ல வில்லை. இருவரும் பழகும் விதம் பேசும் விதம், பார்க்கும் பார்வை இவையெல்லாமே நட்பை தாண்டிய ஒன்று என்று பார்வையாளர்களுக்கு தெளிவாக தெரிகிறது.

Advertisements

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினிடம் பேசிய கமல், காதல் என்பது முக்கோணமாக இருக்கக்கூடாது என்றார். அதற்கு கவின், ஒருவரை காதலித்தால்தான் பிரச்சனை என்று 4 பேரையும் காதலித்தேன் என தெளிவாக சொன்னார்.

இது தவறில்லையா என கண்டித்தார் கமல். ஆனாலும் அடங்காத கவின் லாஸ்லியாவிடம் வழிந்து வருகிறார். அவர்களின் நட்பு அடுத்தக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

Advertisements

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்துள்ள கஸ்தூரி நான்கு பேரை காதலித்தது குறித்து கவினிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறி திருதிருவென முழிக்கிறார் கவின்.

இந்த புரமோவை பார்த்துள்ள நடிகையும், சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் அதற்கு ரியாக்ட் செய்துள்ளார். கவின் வாயலேயே நான் பேரை காதலித்த விவகாரம் வெளியே வந்த போதும் அவர், நான்கு பேரை காதலிக்க வில்லை என சத்தியம் செய்யாத குறையாக ஆர்க்யூ செய்துள்ளார்.

Advertisements

Next Post

கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு

Fri Aug 9 , 2019
Advertisements

You May Like

%d bloggers like this: