மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு – கேரளா

மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு – கேரளா
கேரளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கோழிக்கோடு, மலப்புரம், திருசூர், வயநாடு , கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அவசியம் ஏற்பட்டால் ஒழிய வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எனப்படும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மலப்புரம் பகுதியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டன. காவலப்பறா எனுமிடத்தில் நிச்சரிவுகள் ஏற்பட்டதில் வீடுகள் இடிந்து விழுந்தன.
இப்பகுதியில் மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. மேலும்
, வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கிய 58 பேரும் உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது.

Advertisements

Next Post

இன்னைக்கு மழை வராம போச்சே..! வெஸ்ட் இண்டிஸ் அணி ஏக்கம் - 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி.

Mon Aug 12 , 2019
போர்ட் ஆப் ஸ்பெயின், விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் […]
%d bloggers like this: