மாநாடு இதனால் தான் துவங்கவில்லையா? சிம்புவின் வீடு வரை சென்ற புகார்

சிம்பு என்றாலே வம்பு தான் என்கிற பேச்சு இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. சரியாக ஷூட்டிங் வரமாட்டார் என நீண்டகாலமாகவே ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

அவர் மாறிவிட்டார் என ஒருசிலர் பேசினாலும் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறார்.

ஞானவேல்ராஜா தயாரிப்பில் முஃடீ ரீமேக்கில் சிம்பு நடித்துவந்தார். அதன் ஷூட்டிங்கில் தயாரிப்பாளருடன் சிம்புவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் சிம்பு வெளிநாட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டாராம். இதற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படமும் துவங்கவே இல்லை.

ஞானவேல்ராஜா இந்த பிரச்சனை பற்றி சிம்புவின் அம்மாவிடம் புகார் கூறியுள்ளாராம். இத்தனை பிரச்சனைகளுக்கும் சிம்புவின் நண்பர்கள் தான் காரணம் என்று அவர் புகார் சொல்லியுள்ளாராம். அதனால் இனி சிம்புவை சரியாக சூட்டிங் போகவைக்க குடும்பத்தினரே நேரடியாக களத்தில் இறங்க முடிவெடுத்துள்ளார்களாம்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

400 பேர் அதிரடி பணிநீக்கம்.. உபர் நிறுவனத்தில் ஊழியர்கள் கண்ணீர்..!

Wed Jul 31 , 2019
உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் மார்கெட்டிங் பிரிவை மட்டும் குறிவைத்து சுமார் நான்கில் ஒரு பங்கு ஊழியர்களை மொத்தமாகப் பணிநீக்கம் செய்துள்ளது. உபர் நிறுவனத்தின் முடிவால் கிட்டதட்ட 400 ஊழியர்கள் கண்ணீர் உடன் அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளது. உபர் நிறுவனம் இந்தக் காலாண்டில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கவும், ஊழியர்களின் வேலைத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், […]
%d bloggers like this: