சென்னை மெட்ரோ நிலையங்களில் இருந்து ரூ .10 க்கு வாடகை கார் சவாரி செய்யுங்கள்!

சென்னை மாநகர போக்குவரத்து நெறிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் வசதி கொண்டுவரப்பட்டது.
தற்போது 45 கீ.மீ தூரத்திற்கு வழிப்பாதை திட்ட வேலை நடைப்பெற்று கொண்டிருப்பதாக நிர்வாகம் தெறிவித்துள்ளது.
மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணம் செய்யும் பயணிக்கு பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்பொழுது பயணிகளை கவரும் விதமாக மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 6 கீ.மீ முதல் 8 கீ.மீ வரை தூரத்திற்கு செல்லும் வகையில் வாடகை கார் (கேப்) வசதியை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரெயில் நிலைய பயணிகள் இந்த வசதியை எளிதில் பெறலாம்; மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலமாகவும் பணம் செலுத்தலாம். மொபைல் அப் மூலமாக முன்கூட்டியே செல்லும் இடம், இருக்கை எண், இடம், நேரம் ஆகியவற்றையும் முன் பதிவு செய்து கொள்ளமுடியும். ரூ.10 கட்டணத்தில் 8 கீ.மீ தூரத்தில் குறிப்பிட்ட இடம் வரை பயணம் செய்ய முடியும்.

வாடகை கார் வசதியை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் அவர்கள் நந்தனம் மெட்ரோ நிலையத்தில் தொடங்கிவைத்தார். இந்த கார்கள் மின்சார பேட்டரி மூலம் இயங்குவதாகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகமும் பெங்களூர் மெகா கேப்ஸ் தனியார் நிறுவனமும் இணைந்து இந்த கார் வசதியை மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்கு வழங்குவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Metro rolling in

தற்பொழுது ஒவ்வொரு மெட்ரோ ரெயில் நிலையங்களியும் குறைந்தபட்சம் 2 வாடகை கார் வசதி தொடங்கப்பட்டுள்ளது; இன்னும் 3 மாதங்களில் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் இது விரிவுபடுத்தபடும் என்று தெரிவித்துள்ளார்கள்.

Advertisements

Next Post

RBI's Latest update for Netbanking Users | NEFT | Internet Banking | Full On Galatta

Wed Aug 7 , 2019
Advertisements

Actress HD Images

%d bloggers like this: