19 வயது பெண்ணை மணந்த 16 வயது சிறுவன்.. ஒரு வாரம் கழித்து.. போலீசார் அதிரடி..!!

பெங்களூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் 19 வயது பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

அப்போது தான் இந்த சிறுவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது.அதன் பிறகு அவரது நட்பு காதலாக மாறியது.பிறகு அந்த பெண் வீட்டை விட்டு சிறுவனின் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பிறகு இதை அறிந்த பெண் வீட்டாரும்,சிறுவன் வீட்டாரும் பேசி முடிவு செய்து,இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இதனை அடுத்து ஒரு வாரம் கழித்து இந்த திருமணம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.பின்பு அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.பிறகு சிறுவனுக்கு வயது 16 என்பது உறுதி செய்யப்பட்டு குழந்தை திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் மற்றும் சிறுவனின் பெற்றோர் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Next Post

கைலாசாவை கட்டி முடிச்சிட்டேன்... அப்படியே நானும் செத்துட்டேன்... என்னுடைய சொத்துக்கள் அவர்களுக்கு செல்ல வேண்டும்.... நித்யானந்தா பகீர் தகவல்..!!

Mon Feb 24 , 2020
இவற்றுக்கெல்லாம் சளைக்காமல் வெளிநாட்டில் எங்கோ ஓர் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்த படியே அவ்வப்போது யு-டியூப்பில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கான குடியுரிமை அம்சங்கள் வரை முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய நித்யானந்தா, வாடிகன் போன்று இந்து மதத்திற்கு என்று தனியான இடம் வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக 20 ஆண்டுகளாக உழைத்தேன். பல்வேறு […]
%d bloggers like this: