“லலிதா ஜுவல்லரி” கொள்ளை வழக்கில் சிக்கிய ‘முருகன்’-க்கு எய்ட்ஸ் நோய்.. நடிகையுடன் தொடர்பு..

என்கிட்ட நிறைய திறமை இருக்குங்க.. ஆனா கண்டிப்பா ஒருநாள் சாதிப்பேன்.. பெரிய தயாரிப்பாளரா வருவேன்” என்று மார்தட்டி சொன்ன.. திருவாரூர் திருடன் முருகன் பெரிய சலசலப்பை இந்த வருடம் ஏற்படுத்தி விட்டார். எய்ட்ஸ் நோய்.. நடிகைகளுடன் தொடர்பு என்று இவர் சம்பந்தப்பட்ட பரபரப்புகள் தமிழகத்தில் பறந்து வந்தபடியே உள்ளன. நைட் வாட்ச்மேன்கள் 6 பேர் இருந்தும் பிரயோஜனமில்லை. கடையில் சிசிடிவி கேமராவும் சரியாக வேலை செய்யவில்லை. இதைதவிர சாதாரண நகை கடைகளில் இருக்கும் அலாரம் கூட, இந்த கடையில் இல்லாதது மிகப்பெரிய ஆச்சரியம்! இதெல்லாம்தான் கொள்ளையர்களுக்கு சாதகமாக போய்விட்டது. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கியமான குற்றவாளிதான் முருகன்.. பட அதிபர், கொள்ளையன், ஏடிஎம் திருடன், நாடு முழுவதும் கை வரிசையை காட்டியவர்.. சுவரில் ஓட்டை போடுவதில் கில்லாடி.. கார் ரேஸில் படு சுட்டி.. போலீசுக்கே பல நேரங்களில் தண்ணி காட்டி எஸ். ஆனவர்.. இப்படி தேசிய அளவிலான கொள்ளையனை போலீசார் மும்முரமாக தேடிவந்தனர்.

எப்படியும் போலீசார் நம்மை பிடிக்க மாட்டார்கள் என்று நம்பிதான் இந்த செட்டிலாகும் முடிவுக்கு முருகன் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முருகனின் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் விசாரணை வளையத்துக்குள் உள்ளதால்தான், சுரேஷ்.. அதை தொடர்ந்து முருகன் என சரண் அடைந்தனர்.

கணேஷூம், நானும்தான் சுவற்றில் ஓட்டை போட்டோம். உள்ளே போயி நகைகளை அள்ளி வந்தது நாங்கதான். மீதி 2 பேர் வெளியில நின்னுட்டு இருந்தாங்க. முக்கியமான ஸ்கெட்ச் போட்டது நான்தான். அதனால் எனக்கு 12 கிலோ நகை, கணேசனுக்கு 6 கிலோ.. வெளியில இருந்த 2 பேருக்கும் 5 கிலோ.. போன ஜனவரி மாசம் திருச்சி சமயபுரம் டோல்கேட் பக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் பேங்கில் வெறும் 150 கிராம் தங்கம்தான் கிடைச்சது. இருந்தாலும் அதையும் சரிக்கு சமமா நாங்க பங்கு போட்டுக்கிட்டோம்” என்று கூறி அதிர வைத்தான் முருகன். கொள்ளை அடித்த நகைகளுடன் பெங்களூருவிலேயே செட்டில் ஆகிவிடலாம் என்று பிளான் போட்டுள்ளனர் முருகன் குடும்பத்தினர். ஏனென்றால், முருகனுக்கு பெங்களூருவில் சொந்தமாக ஒரு பங்களா இருக்கிறது. இந்த ஒரு பங்களாவே பல கோடி ரூபாய் மதிப்பு இருக்குமாம்.

எப்படியும் முருகன் 100 கோடி ரூபாய் கொள்ளை அடித்து வைத்திருப்பான் என்கிறார்கள். ஏனென்றால் கொள்ளையடித்தது முழுக்க கோடீஸ்வர வீடுகள், பேங்குகள்தான்! இதில் பல சொத்துக்களை தன்னுடைய சொந்தக்காரர் பெயரில், பினாமி பெயரில் முருகன் பதுக்கி இருப்பதாக தெரிகிறது. இதுபோக, இந்த திருட்டு பணத்தில் சினிமா எடுக்கிறேன் என்று சொல்லிகொண்டு பணத்தை கொண்டு போய் தன் படக்கம்பெனியில் கொட்டி உள்ளான் முருகன்.

கொள்ளை அடித்த பணத்தை கொண்டு தெலுங்கு சினிமா உலகில் ஏகப்பட்ட ஆட்டம் போட்டுள்ளார் முருகன்.. துணை நடிகைகள், நடிகைகளுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளார். கடைசியில் எய்ட்ஸ் வரவும்தான் ஆட்டம் அடங்கி உள்ளது. பல் கொட்டி போய்.. உடம்பு மெலிந்து.. தலை மொட்டை ஆகி.. ஆளே உருக்குலைந்து போயுள்ளார். இந்த எய்ட்ஸ் நோய்க்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில்தான் முருகன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த ஒரு ஆஸ்பத்திரி மட்டுமல்ல.. வேறு எந்த இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிக்கு போனாலும் பெயரை மாற்றி சொல்லி உள்ளார். அதிலும் சிவா, ராஜா.. இந்த ரெண்டு பெயர்களைதான் தன் பெயருக்கு பதிலாக ஆஸ்பத்திரிகளில் முருகன் பயன்படுத்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார். நடிகைகள், துணை நடிகைகளுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளான். கொள்ளை அடித்த பணம் சுமார் ரூ.100 கோடி, 2 சொகுசு கார்கள் இதெல்லாம் எங்கே இருக்கிறது, என்பதை இனிமேல்தான் நம் போலீசார் விசாரிப்பார்கள்.

Advertisements

fogpriya

Next Post

'பார்த்திபன் வடிவேலு' இணையும் பாரதி கண்ணம்மா 2..!

Mon Dec 23 , 2019
யக்குனர் சேரன் இயக்கிய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் கதை சீரியஸாக சென்று கொண்டிருந்தாலும் அதில் பார்த்திபன் வடிவேலுவின் காமெடி அவ்வப்போது வந்து பார்வையாளர்களை குஷிப்படுத்தும். இந்த படத்தில் காமெடியை இன்னும் பலர் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் சேரனின் இயக்கத்தில் விரைவில் ’பாரதி கண்ணம்மா 2’ படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்திபன் மற்றும் வடிவேலு […]

Actress HD Images

%d bloggers like this: