காவலன் ‘எஸ்ஓஎஸ்’ செயலியை, 10 நாட்களில், 3.50 லட்சம் பேர் பதிவிறக்கம் போலீஸ் கமிஷனர் தகவல்..!

சென்னை காவலன் எஸ்ஓஎஸ்’ செயலியை, 10 நாட்களில், 3.50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தனர்’ என, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்.ஆபத்து நேரங்களில், பெண்களுக்கு உடனடியாக, போலீசாரின் உதவி கிடைக்க, தமிழக காவல் துறை, ‘காவலன்எஸ்ஓஎஸ்’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று, நுங்கம்பாக்கத்தில் உள்ள, லயோலா கல்லுாரியில் நடந்தது.இதில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்று, மாணவியருக்கு, ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலி குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கினார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ”பெண்களின் பாதுகாப்புக்கு என, பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள, காவலன் எஸ்ஓஎஸ் எனும் செயலியை, 10 நாட்களில், 3.50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தமிழகத்தில், ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருக்கும் அனைத்து பெண்களும், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்,” என்றார்.

Advertisements

fogpriya

Next Post

ஒத்த டிவிட்டை போட்டு வெறுப்பேத்திய "சாக்ஷி அகர்வால்" கடுப்பான கவின் ரசிகர்கள்..!

Thu Dec 19 , 2019
பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் சக போட்டியாளரான கவினை சீண்டி டிவிட்டியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான கவின் கலந்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார் கவின். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்திலும் நடித்துள்ளார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், சக போட்டியாளரான சாக்ஷியை காதலித்தார். கவினும் சாக்ஷியும் ஒருவரையொருவர் காதலித்த […]

Actress HD Images

%d bloggers like this: