எல்லாமே 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.. பூட்டிய வீடு.. வெடித்துச் சிதறிய ஃபிரிட்ஜ்.. 6 பேர் கருகி பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் பூட்டிய வீட்டுக்குள் குளிர்சாதன பெட்டியில் மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இறந்த 5 குழந்தைகளும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது. காஸியாபாத்தின் லோனி பகுதியில்தான் இந்த விபத்து நடந்தது.

அந்தப் பகுதியில் உள்ள மெளலானா ஆசாத் காலனிப் பகுதியில் வசித்து வந்தவர் பர்வீன். 40 வயதாகிறது. இவர் தனது வீட்டில் பிள்ளைகள் பாத்திமா (12), சாஹிமா (10), ரதியா (8), அப்துல் அஜீம் (8), அப்துல் அஹாத் (5) ஆகியோருடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துக் கொண்டு வெடித்துச் சிதறியது. இதில் பர்வீன் உள்பட 6 பேருமே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீப்பிடித்துக் கொண்டபோது அவர்கள் படுத்திருந்த அறை முழுவதும் தீ பரவி விட்டதால் யாரும் தப்ப முடியாமல் போனது. இந்த சம்பவம் காஸியாபாத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

சூர்யா-வின் ‘சூரரை போற்று’ படத்தின் முக்கிய அப்டேட்..

Wed Jan 1 , 2020
நடிகர் சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’சூரரைப்போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் ஹரி இயக்கத்தில் உருவாகும் ஒரு அதிரடி ஆக்ஷன் குடும்ப சென்டிமென்ட் படத்திலும், அதனை அடுத்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் […]
%d bloggers like this: