பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து மரணம்….

ரஷ்யாவின் கடும் பனியில் வீட்டின் பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்தது. கிழக்கு ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தில் -7 டிகிரி செல்ஸியஸ் குளிரில், 7 மாத குழந்தையை, 5 மணிநேரத்திற்கு பால்கனியில் தனியே விட்டு சென்ற பெற்றோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வகுகின்றனர். நல்ல காற்றை சுவாசிக்க வீட்டில் உள்ள பால்கனியில் குழந்தையை அதன் சிறிய தள்ளுவண்டியில் பெற்றோர் அமரவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தை ஹைப்போதர்மியாவால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. ஹைப்போதர்மியா என்பது கடும் குளிரினால் உடலின் வெப்பநிலை மிகவும் குறையும்போது ஏற்படுகிறது.இது குறித்து அந்த பிராந்தியத்தின் சுகாதார துறை அமைச்சர் கூறுகையில் ”இங்கு நிலவும் கடும் குளிரினால் யாரையும் தனியே விடுவது ஆபத்து. குறைந்த பட்ச வெப்பநிலையால், குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவார்கள், அதனால் எப்போதும் குழந்தைகள் கண்காணிக்கப்படவேண்டும் ” என்றும் கூறியுள்ளார்.

Advertisements

Next Post

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!ஒரே செல்ஃபி.!

Wed Jan 8 , 2020
நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் ப்ரெக் அப் புறளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்கி. நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதிலிருந்து, நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் மிகவும் நெருக்கமாக பழகிவருகின்றனர். இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அதனை உறுதி செய்யும் விதமாக, வெளிநாடு, கோவில், சுற்றுளா, விருது விழா என எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாகவே செல்வது மற்றும் மிக நெருக்கமான புகைப்படங்களையும் […]

Actress HD Images

%d bloggers like this: