வருடத்துக்கு ’26 மில்லியன் டாலர்’ சம்பாதிக்கும்.. யூ ட்யூப் சேனல் நடத்தும் 8 வயது சிறுவன் “ரியான் காஜி”

எட்டு வயதான சிறுவன் ரியான் காஜி யூட்யூப் சேனலில் 2019ஆம் ஆண்டின்படி அதிகம் சம்பளம் வாங்கும் படைப்பாளராக இருக்கிறார் என்று ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்பஸ் படி  ரியான் காஜி (எ) ரியான் குவான்  யூ ட்யூப்பில் வீடியோவில் அதிக வருமானமான 22 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். 

ரியானின் பெற்றோரால் 2015இல் தொடங்கப்பட்டது ரியான் வேர்ல்ட் என்ற யூ ட்யூப்  சேனல். இந்த சேனல் தற்போது 22.9 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.  ஆரம்பத்தில் “ரியானின் பொம்மைகள் குறித்த விமர்சனம்”  (Ryan ToysReview) என்ற சேனல் புதுவிதமான வீடியோக்களை கொண்டிருந்தது. புதியதாக விற்பனைக்கு வந்த பொம்மைகளை வைத்து விளையாடிக் காட்டும் விதமாக வீடியோக்கள் உள்ளன.

பல வீடியோக்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகமானமுறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் சேனல் உருவாக்கியதிலிருந்து கிட்டத்தட்ட 35 பில்லியன் பார்வைகளை கூட எட்டியுள்ளதென சோஷியல் பிளேட் தரவுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நுகர்வோர் வழக்கறிஞர் அமைப்பான ட்ரூத் இன் அட்வர்டைசிங்  அமெரிக்கா பெடரல் டிரேட் கமிஷனுக்கு புகார் அளித்த பின்னர் சேனர் பெயர் மாற்றப்பட்டது. பொம்மைகள் குறித்து விமர்சன வீடியோ செய்யப்படும்போது அந்த வீடியோக்கள் ஸ்பான்சர் செய்யப்பட்டதா என்பதை சேனல் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. பொம்மைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை  காண்பிப்பதற்கான பணத்தை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரியான் ஏஜ் ( Ryan ages) என்ற சேனல் வழியாக கூடுதலாக உயர் கல்விக்கான  வீடியோக்களை வழங்குகிறது. ஃபோர்ப்ஸின் தரவரிசையில், ரியான் காஜி டெக்சாஸைச் சேர்ந்த நண்பர்கள் நடத்தும் டியூட் பெர்பெக்ட் (Dude Perfect ) என்ற சேனலை மிஞ்சி விட்டார். ட்யூட் பெர்பெக்ட் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. ஜூன் 1, 2018 முதல் ஜூன் 1 , 2019 வரை 20 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் மற்றொரு குழந்தை நட்சத்திரத்தின் சேனலான ரஷ்யாவின் அனஸ்தேசிய ராட்ஜின்ஸ்காயா 18 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்றுள்ளது. 

செப்டம்பர் தொடக்கத்தில், யூ ட்யூப்பின் தாய் நிறுவனமான கூகுள் 170 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டது. எஃப்.டி.சி  குழந்தை யூடியூப் பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தரவுகளை அனுமதியின்றி சேகரிப்பதாக குற்றம் சாட்டியது. 

Advertisements

fogpriya

Next Post

பிரபல நடிகையுடனான கிசுகிசு பற்றி நடிகர் ஜெய் விளக்கம்..!

Fri Dec 20 , 2019
நடிகை அஞ்சலியுடன் காதலில் இல்லை என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். எங்கேயும் எப்போதும், பலூன் உட்பட சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் ஜெய் – அஞ்சலி. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டானதாக கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும், அதோடு விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை ஆரம்பம் முதலே இருவரும் மறுத்து வருகின்றனர். இருந்த போதும் தொடர்ந்து […]

Actress HD Images

%d bloggers like this: