பெண்களே இல்லாத படம் “பன்றிக்கு நன்றி சொல்லி” ஆண்கள் மட்டும் ..!! காரணம்?

பன்றிக்கு நன்றி சொல்லி என்ற பெயரில் விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படத்தில் பெண்களே நடிக்கவில்லை என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். புதையலைத் தேடி செல்லும் கௌபாய் வகைப் படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலம். தமிழில் அந்த வகைப் படங்களில் அதிகமாக நடித்தது ஜெய்சங்கர்தான். அதன் பின்னர் சிம்பு தேவன் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற கௌபாய் படத்தை இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படம் அந்த ஜானரில் வெளியாக இருக்கிறது.

பன்றிக்கு நன்றி சொல்லி படத்தில் நிஷாந்த், விஜய் சத்யா, நக்கலைட்ஸ் செல்லா, வியன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, விக்னேஷ் செல்வராஜ். இசை, சுரேன் விகாஷ். படம் குறித்து இயக்குனர் பாலா அரன் கூறியதாவது: 10ம் நூற்றாண்டில் ஒரு சீன துறவி மகாபலிபுரம் வருகிறார். அவரிடம் ஒரு பன்றி சிலை இருக்கிறது.

அந்த சிலை வைத்திருப்பவர்களுக்கு நோய்நொடி வராது, ஆயுளும் அதிகம். வந்த இடத்தில் திடீரென்று அந்த சிலை காணாமல் போகிறது. சிலையின் பயணம் மற்றும் அதை தேடுபவர்களின் பயணம்தான் கதை. படத்தில் ஹீரோயின் உள்பட எந்த பெண் கேரக்டரும் கிடையாது. காரணம், இந்த கதைக்கு பெண்கள் தேவைப்படவில்லை.

Advertisements

Next Post

கடைசியாக விவாகரத்தான இயக்குனரை மணக்கும் நடிகை அனுஷ்கா..!!

Tue Mar 3 , 2020
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, விவாகரத்தான இயக்குனரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர் தொழில் அதிபரை அனுஷ்கா மணக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி எதுவும் நடக்கவில்லை.இதையடுத்து கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாகவும், […]
%d bloggers like this: