தனுஷ்41 படப்பிடிப்பு துவக்கம்..! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் கூட்டணியில் மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் திரைப்படத்தை அடுத்து, தனுஷ் தற்போது ‘பட்டாஸ்’ திரைப்படத்தி வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். அதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 40-வது திரைப்படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துள்ளார் தனுஷ்.

இன்னும் பெயர் சூட்டப்படாத தனுஷ்40 படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தனது 41-வது திரைப்படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார் தனுஷ். ஆம், தனுஷ் 41 திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று திருநெல்வேலியில் ஆறம்பித்துவிட்டதாம். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
தனுஷ்41 படத்தை பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விறுவிறுவென அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்துவரும் தனுஷ், ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்து வருகிறார். சன் பிக்சர்ஸ் உடனான D44 திரைப்படம் உட்பட, மேலும் 5 படங்களை கையில் வைத்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisements

Next Post

நான் அவன் இல்லை புகழ் ஜீவனி-ன் "பாம்பாட்டம்" முதல் ஹாரர் படமாகும்... 5 மொழிகளில் தயாராகிறது...

Sat Jan 4 , 2020
நான் அவன் இல்லை புகழ் ஜீவன் பாம்பாட்டம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை 5 மொழிகளில் இயக்கப்போவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். யூனிவர் சிட்டி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் தான் நடிகர் ஜீவன் அந்த படத்தில் காதலனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து இருப்பார். அந்த படம் ஓரளவுக்கு பேசப்பட்டது. அதன் பின் காக்க காக்க படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். அந்த படம் […]
%d bloggers like this: