“சர்வர் சுந்தரம்” படம் அவ்வளவுதானா? அதிர்ச்சி தகவல்..!!ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!!

சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை அறிவிக்கப்பட்டிருந்தும் ஒரு முறை கூட அறிவிக்கப்பட்ட தேதியில் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிப்ரவரி 14ல் ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸாகும் என மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘சர்வர் சுந்தரம்’ படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன. இந்த படத்தின் மீது அதிக அளவில் கடன் இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்து இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இந்த படம் ரிலீஸ் ஆக கூடாது என்று கேவியட் மனு போட 40க்கும் மேற்பட்டோர் தயாராக இருப்பதாகவும் விரைவில் இவர்கள் நீதிமன்றம் சென்றால் இந்த படம் ரிலீஸாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இனிமேல் அந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்றும் இந்தப் படம் இன்னொரு மதகஜராஜா படம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisements

Next Post

"அயலான்" அப்டேட்: முதல் முறையாக மூன்று வேடத்தில் "சிவகார்த்திகேயன்"

Thu Feb 13 , 2020
சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் தயாரிப்பில் சமீபத்தில் கேகேஆர் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை இரண்டு வேடத்தில் கூட எந்த ஒரு படத்திலும் நடித்ததில்லை […]
%d bloggers like this: