நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக இளம் பெண்… யாரா இருக்கும்.. இணையத்தை கலக்கும் செல்பி போட்டோ..!!

நடிகர் சிம்பு இளம்பெண் ஒருவருடன் இருக்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது. நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் மாநாடு படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். பெரும் தடைகளை தாண்டி இப்படத்தின் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக உடல் எடையை குறைக்கும் பணியில் இறங்கியுள்ளார் சிம்பு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் சிம்பு. அண்மையில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்ட சிம்பு, 40 நாட்கள் விரதம் மேற்கொண்டு ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் மலைக்கு சென்றுவிட்டு திரும்பியதை தொடர்ந்து மாநாடு படத்தின் பணிகள் சூடு பிடித்துள்ளது.

அண்மையில் சிம்பு ஷேவ் செய்து எடைய குறைத்த போட்டோக்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சிம்பு இளம் பெண் ஒருவருடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இருவரும் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு ஒருவரை ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட அந்த செல்பி போட்டோவை நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் யார் இந்த பெண் என கேட்டு வருகின்றனர். மேலும் வீட்டில் பெண் பார்த்து விட்டார்களா? அவர்தான் இவரா? இவரைதான் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என்றும் கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisements

Next Post

நடிகை திரிஷா-வின் புகைப்பட தொகுப்பு..!!

Tue Jan 28 , 2020
Advertisements

Actress HD Images

%d bloggers like this: