விஜய்-க்கு ரூ.1,200 கோடி சொத்து..? ஆதாரங்களை காட்டிய வருமான வரித்துறை..!!

நடிகர் விஜயின் சொத்து விவரங்களை பக்காவாக கையில் வைத்துக் கொண்டு தான் பனையூர் வீட்டில் வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி போட்டு இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நாளாக நேற்று மாறியிருக்கிறது. நடிகர் விஜயை கொத்தாக தங்களது காரில் அள்ளிக் கொண்டு சென்னை பறந்த போதும், பனையூரில் நடந்த சம்பவங்கள் பற்றியும் விசாரித்தால் திடுக்கிடும் காட்சிகள் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. திரையுலகமே இப்போது இந்த ரெய்டு பற்றியும், விஜயை ஹேண்டில் செய்த வருமான வரித்துறை பற்றியும் உள்ளுக்குள் பதறி வருகின்றனர். பிகில் பட இசை வெளியீட்டில் இருந்து தொடங்குகிறது இந்த கதை.

விஜயை தலையில் வைத்து கொண்டாடும் ரசிகர்கள், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் போட்ட டுவிட்டர்கள் தான் இப்போது வேட்டு வைக்க காரணமாக அமைந்திருக்கின்றன. பிகில் வியாபாரம், வசூல் நிலவரம் என்று தகவல்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்க ஸ்கெட்ச் போட்டியிருக்கிறது வருமான வரித்துறை. மொத்தம் 13 டீம்கள், 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள் என பக்கா பிளானுடன் களத்தில் குதித்த ஐடி நிர்வாகம், ஒரு பக்கம் அன்புச்செழியனையும், மறுபக்கம் விஜயையும் நோக்கி நகர்ந்தது.

அதனால் தான் நேரடியாக மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நெய்வேலிக்கே சென்றே அதிரடியை ஆரம்பித்தது. சொந்த காரில் படப்பிடிப்பு முடிந்தவுடன் வருவதாக கூறிய விஜயிடம் கடுமை காட்டிய டீம், நேராக தங்களது இன்னோவா காரில் சென்னைக்கு அலேக்காக அழைத்து வந்திருக்கிறது. பின்னர் நேராக பனையூர் பங்களாவில் விசாரணையை ஆரம்பித்து இருக்கிறது. மெதுவாக, இயல்பாக விஜய் விசாரணையை எதிர் கொள்ள…ஒரு கட்டத்தில் சொத்து பட்டியலையும், அதற்கான ஆவணங்களையும் கொத்தாக தூக்கி போட்டுள்ளனர்.

சென்னை, மும்பை, இலங்கை, கூர்க் என வாங்கி போடப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள், அதற்கான ஆதாரங்கள் என பக்காவாக விஜயிடம் காட்டி இருக்கின்றனர். இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்ட விஜய் அப்படியே ஷாக் ஆகி… சில நிமிடங்கள் பேச முடியாமல் திணறிவிட்டாராம். ஒன்றல்ல… இரண்டல்ல.. 25 ஆண்டுகளாக நடித்து சம்பாதித்தது என்று ஒரு கட்டத்தில் அழாத குறையாக பேசிய விஜய், எவ்வளவு வரி, பெனால்டி என்று சொல்லுங்கள்.. கட்டிவிடுவதாக உறுதி அளித்தாராம்.

அதன் பிறகே… மெல்ல மென்மையான போக்கை கடைபிடித்த அதிகாரிகள்… உயரதிகாரிகளுக்கு சொல்ல வருமான வரித்துறையின் அறிக்கை ரெடியாகி ரிலீஸ் ஆகியிருக்கிறது. தமது 1200 கோடி ரூபாய் சொத்து பற்றிய தகவல்களை ஐடி துறை பக்காவாக வைத்திருந்ததை கண்ட விஜய் அதிர்ந்தே போய்விட்டாராம். அவரது மனைவியிடமும் வெளிநாட்டு சொத்து முதலீடுகள் பற்றி கேட்கப்பட.. அவரும் ஷாக்காகி விட்டாராம். எல்லாம் முடிந்த பிறகு… பேக்கப் என்ற அதிகாரிகள்… விரைவில் மற்ற விசாரணைகளுக்காக அழைப்பார்கள் என்றும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறி இருக்கின்றனர். அதன்பிறகே ஓரளவு நார்மலாகி மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொள்வது பற்றி படப்பிடிப்பு குழுவிடம் தெரிவித்து விட்டு…. இப்போது படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளாராம்… ! இனி சிறிது காலம்… சினிமா தொடர்பான விழாக்கள், அறிக்கைகள், பேட்டி, பேச்சு என எல்லாத்துக்கும் ஒரு புல்ஸ்டாப் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன… ஆக விரைவில் ஐடி விசாரணையின் தாக்கம் அப்பட்டமாக தெரியவரும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

Advertisements

Next Post

தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. கண்ட இடங்களில் கை வைத்த இளைஞன்... இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

Fri Feb 7 , 2020
மீரா மிதுன் ஆண் நண்பருடன் போட்ட செக்ஸி டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் அவர் நடிகரும் இயக்குநருமான சேரன் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டை கூறி பகீரை கிளப்பினார். அதாவது சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறினார். அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவறான எண்ணத்தில் தொடவில்லை என கண்ணீர் […]
%d bloggers like this: