தலைவர் 168 ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’தலைவர் 168’ படத்தின் நாயகியாக நடிகை மீனா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக எஜமான், வீரா மற்றும் முத்து ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை மீனா, 24 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பின் அதிக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை மீனா, நல்ல கேரக்டர் கிடைத்தால் மட்டுமே நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் மீண்டும் ’தலைவர் 168’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது
தலைவர் 168 படத்தில் நடிகை மீனா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

போன டிசம்பர்-ல கல்யாணம், இந்த டிசம்பர்-ல டைவர்ஸ்... அறிவித்த பிரபல நடிகை..!

Tue Dec 10 , 2019
நடிகை ஸ்வேதா பாசு, தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். தமிழில், உதயா நடித்த ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், கருணாஸ் நடித்த சந்தமாமா உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு பிரசாத். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தேசிய விருதும் பெற்றுள்ளார். இவரும் இவரது நீண்ட நாள் நண்பரான இந்திப் பட இயக்குனர் ரோகித் மிட்டலும் காதலித்து வந்தனர். […]

Actress HD Images

%d bloggers like this: