எப்போ வேணா கூப்பிடு.. உனக்காக நான் இருக்கேன்.. முகெனை குறிவைக்கும் மீரா மிதுன்… கடுப்பான நெட்டிசன்ஸ்!

தந்தையை இழந்த முகெனுக்காக உருகிய மீரா மிதுனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் முகென். மலேசியாவை சேர்ந்த இவர் தனது இயல்பான நடத்தையாலும் நேர்மையான விளையாட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார். குடும்பத்தினர் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்ட முகென், தனது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டதால் சிறு வயது முதலே அன்புக்காக ஏங்கியதாக தெரிவித்தார். அவரது பிஹேவிங்கிலும் அவர் அன்புக்கு ஏங்குவது நன்றாகவே தெரிந்தது. இந்நிலையில் முகென் ராவின் தந்தையான பிரகாஷ் ராவ் நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்தார். கார்டியாக் அரஸ்ட்டால் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களான இயக்குநரும் நடிகருமான சேரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முகென் ராவின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர். ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் முகெனுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவரது தந்தையின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தனர். பிரகாஷ் ராவின் இறுதிச்சடங்கு நேற்று மாலை மலேசியாவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தின் போது சவப்பெட்டியில் எடுத்து செல்லப்பட்ட தனது தந்தையின் உடலை முகென் சுமந்து சென்றார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் சர்ச்சைகளையும் சண்டைகளையும் உருவாக்கிய நடிகை மீரா மிதுன், தந்தையை இழந்து தவிக்கும் முகெனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ரொம்பவே உருகி உருகி ஆறுதல் கூறியுள்ளார் மீரா மிதுன்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தைரியமாக இரு முகென். ஆன்மிக காரணங்களுக்காக தான் எல்லாமே நடக்கிறது. நான் எப்போதும் உங்களுக்காக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை கூப்பிடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர் என்று கூறியிருக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகெனுடன் சேர்ந்து எடுத்த போட்டோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மீரா மிதுன்.

மீரா மிதுனின் இந்த டிவிட்டையும் போட்டோவையும் பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளானர். அதே நேரத்தில் சிலர் அவரை பாராட்டியிருக்கின்றனர். ஏன் கன்டென்ட் எதுவும் கிடைக்கவில்லையா, முகென் தந்தை இறந்த விஷயத்தை இப்போது கையில் எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் ஒருவர் . சிலர் கால் மி எனிடைம்ன்னா என்ன அர்த்தம் என்றும் டபுள் மீனிங்கில் கலாய்த்திருக்கின்றனர்.

Advertisements

Next Post

சூப்பரான ஜோடியாக மாறியிருக்கும் சசிகுமார் அஞ்சலி..!! நாடோடிகள் 2 சில நிமிட வீடியோ..!!

Thu Jan 30 , 2020
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு சய்துளளார். நகைச்சுவை நிறைந்த படமாக நாடோடிகள் 2 படம் உருவாகி உள்ளது. முதல் பாகம் சீரியஸாக இருந்த நிலையில் இரண்டாம் பாகம் முற்றிலும் நகைச்சுவை பாணியில் எடுத்துள்ளார்களாம். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடோடிகள் 2 Sneak Peek வெளியாகி உள்ளது.அந்த காட்சியில் வயதான தாத்தா ஒருவர் சசிக்குமார், மற்றும் அஞ்சலியிடம் காதலிக்க […]

Actress HD Images

%d bloggers like this: