“நயன்தாரா” பேருக்கு இப்படியொரு அர்த்தமா? ரசிகர்களை குஷியாக்கிய போனிகபூர்..!

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.அவரது நடிப்பில் உருவாகி, தீபாவளியை முன்னிட்டு பிகில் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அவர் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தில் நடித்துள்ளார். அப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

சினி விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் சிறந்த நடிகைக்கான விருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு Sridevi Award for Inspiring Women of Indian Cinema என்ற விருதும் வழங்கப்பட்டது. அதனை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் வழங்கினார்..

அப்பொழுது அவர் தாரா என்றால் ஹிந்தியில் நட்சத்திரம் என்று அர்த்தம். எனவே இந்த விருதுக்கு நயன்தாரா மிகவும் தகுதியானவர் தான் என போனிகபூர் கூறியுள்ளார்.

Advertisements

Next Post

இயக்குனர் அட்லியின் அடுத்த படத்திற்கு ஹீரோயின் தன் மனைவி பிரியாவா?

Mon Jan 6 , 2020
இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா, தொலைக்காட்சி தொடர்களிலும் சிங்கம், சிங்கம் 2, உள்பட ஒருசில படங்களிலும் நடித்தவர் என்பது தெரிந்ததே. ஆனால் திருமணத்திற்கு பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுக்க முழுக்க குடும்பத்தலைவியாக மாறினார். இந்த நிலையில் சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அட்லி, ‘பிரியாவின் நடிப்பு திறமை குறித்து தனக்கு தெரியும் என்றும் நிச்சயம் அவரை ஒரு நல்ல கேரக்டரில் நடிக்க வைப்பேன் என்றும் […]
%d bloggers like this: