இவர்தான் காதலரா.. மிக நெருக்கமான புகைப்படம் .. கலக்கும் பிரியா பவானிசங்கர்..!!

நடிகை பிரியா பவானிசங்கர் தான் நெருக்கமாக இருக்கும் ஆண் ஒருவரை புகழ்ந்து பதிவிட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை பிரியா பவாணிசங்கர் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார் பிரியா பவானிசங்கர்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் பெரும் பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சீரியல், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் பிரியா பவானிசங்கர். தொடர்ந்து, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பிரியா பவானிசங்கர். பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் பிரியா பவானிசங்கரின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் மேகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனை தற்போது மாஃபியா, இந்தியன் 2 உள்ளிட்ட 7 படங்களை கைவசம் வைத்துள்ளார். பிஸியான நடிகையாக உள்ள பிரியா பவானிசங்கரை பிக்பாஸ் பிரபலம் ஒருவர் காதலித்து ஏமாற்றியதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா, அவரிடம் காதலை சொன்னதாகவும் தகவல் பரவியது. ஆனால் அந்த தகவலை நடிகர் எஸ்ஜே சூர்யா மறுத்து விட்டார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த நபரை புகழ்ந்து கவிதையாக ஒரு போஸ்ட்டையும் பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். அவர் பதிவிட்டிருப்பதாவது, நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன் என்று பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துகள் மா.. என தெரிவித்திருக்கிறார்.

பிரியா பவானிசங்கரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இருவரும் இதே போன்று அன்புடன் இறுதிவரை இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள், பிரியா பவானிசங்கரின் இந்த பதிவை பார்த்து மனம் நொந்து போயுள்ளனர். நீங்களும் இப்படி காதலில் விழுந்தால் நாங்கள் என்ன செய்வது என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.மேலும் சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு போட்டுக்கலாம், நெஞ்சு கிழிஞ்சுருந்தா எங்கே முறையிடலாம் என்றும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். சிலர் என்ன சொல்ல வர்றீங்க? இவர்தான் உங்க லவ்வரா என்றும் கேட்டுள்ளனர். சில ரசிகர்கள் உங்களை இருவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

Advertisements

Next Post

ஜோடி போட்ட நடிகருக்கு அக்காவாகும் த்ரிஷா.. அடப்பாவமே! தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்..!!

Tue Jan 28 , 2020
தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக கிட்டத்தட்ட 15 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நிறைய படங்களில் ஜோடி போட்டு விட்டார். அதில் ஒருவர்தான் ஜெயம் ரவி. ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான உனக்கும் எனக்கும் பூலோகம் சகலகலா வல்லவன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் […]
%d bloggers like this: