பள்ளி பருவ காதல் ரகசியத்தை போட்டுடைத்த கண்ணழகி..! இருவரும் காதலித்தோம்.. ஆனால் அது பிரேக்அப் ஆகிருச்சு…

நடிகை பிரியா வாரியர் தனது காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் ப்ரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் இவர் தனது புருவத்தை தூக்கி சக மாணவனை பார்த்து கண்ணடித்ததை கண்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

அந்தளவுக்கு பிரபலமானது அந்தக் காட்சி. ராகுல் காந்தி ஒரு முறை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக் குறித்து பேசிவிட்டு பின்னர் அவரை கட்டியணைத்து கண்ணடித்தார். அப்போது பிரியா வாரியருடன் ஒப்பிட்டு ட்ரோல்ஸ் செய்யப்பட்டார் ராகுல். ராகுலுடன் ஒப்பிடும் அளவுக்கு அந்தக்காட்சி பெரும் பிரபலம். அடார் லவ் படம் மலையாள தேசம் மட்டுமின்றி நாடு முழுக்கவும் அவருக்கு ரசிகர் பட்டாளத்தை தேடி தந்தது.

அந்தக் காட்சியால் எந்த அளவுக்கு பிரபலமானாரோ அந்தளவுக்கு சர்ச்சைகளுக்கும் ஆளானார். இந்நிலையில் சமீபத்தில் ப்ரியா வாரியார் நடித்திருந்த ஸ்ரீதேவியின் பங்களா படத்தின் டிரைலரில் மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் அதுவும் சர்ச்சையானது. சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ப்ரியா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரியா வாரியார் தனது காதல் குறித்து மனம் திறந்திருக்கிறார்.

அந்த பேட்டியில் தான் 9 ஆம் வகுப்பு படித்தபோது ஒரு பையன் தன்னிடம் காதலை சொன்னதாக கூறியிருக்கிறார். தானும் அந்தக் காதலை ஏற்றுக்கொண்டு ஒருவரையொருவர் காதலித்ததாகவும் கூறினார்.பின்னர் நாளடைவில் அது ஒரு இன ஈர்ப்பு என்பதை இருவரும் புரிந்து கொண்டதாகவும் இதனால் இருவரும் பேசி பிரிந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் பிரியா வாரியர். 9ஆம் வகுப்பு படிக்கும் போதே தான் காதல் வயப்பட்டதை பளிச்சென கூறியுள்ளார் பிரியா வாரியர்.

Advertisements

Next Post

விக்னேஷ் சிவனுக்கு இரண்டு ஆண்டுகள் என்ன ஆச்சு.. அடுத்த படம் ட்ராப்பா? .. கம்பேக் ஆவாரா?அவரது ரசிகர்கள் கேள்வி?

Sun Dec 29 , 2019
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்னும் புதிதாக எந்த படத்தையும் இயக்க ஆரம்பிக்கவில்லை. சிவகார்த்திகேயனுடன் விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்று செய்கிறார் என்ற அப்டேட் வெளியான நிலையில், தற்போது அந்த படமும் ட்ராப் என்ற தகவல்கள் பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட நெற்றிக்கண் திரைப்படமும் மூக்குத்தி அம்மன் படத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் […]

Actress HD Images

%d bloggers like this: