பேட்மிண்டன் வீராங்கனை”பி.வி.சிந்து” உறுதி..அடுத்த இலக்கு என்ன தெரியுமா?

எனது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது தான் என பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார் பி.வி,சிந்து. இதனால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பி.வி.சிந்து, “விளையாட்டில் தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று வருகிறேன். நான் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அது நிறைவேறாத பட்சத்தில் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. இது போன்ற விமர்சனங்களும் எதிர்பர்ப்புகளும் என்னை பாதிக்காது” என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மேலும் அவர், “எனது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக் தான், நிச்சயமாக ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வெல்வேன்” எனவும் கூறியுள்ளார்.

Advertisements

Next Post

சசிகுமார் - சமுத்திரக்கனி கூட்டணி.. நாடோடிகள் - 2 திரைப்படம் குறித்த லேட்டஸ் அப்டேட்..!

Fri Jan 3 , 2020
சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் – 2 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாடோடிகள்’. நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமரசன ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்தது. அதையடுத்து, சமுத்திரக்கனியும், சசிகுமாரும் தனித்தனியாக பல படங்களை, இயக்கியும், நடித்தும் வந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இந்த கூட்டணி […]
%d bloggers like this: