கோலாகல கொண்டாட்டமாய் தொடங்கியது – பக்ரீத் பண்டிகை..!

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் திரளானோர் பங்கேற்றனர். ஒவ்வோர் ஆண்டும் அராபிய மாதம் துல்ஹஜ் பத்தாம் நாள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்துகின்றனர். பின்னர் இனிப்பு மற்றும் இறைச்சி உணவை பகிர்ந்து உண்ணுவது வழக்கமாக இருந்து வருகிறது.
டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே திரண்டனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாம் மக்கள் இந்த நாளை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இறைவனின் கட்டளையை ஏற்று, தன் தனையனையே இறைவனுக்கு அர்ப்பணிக்கத் துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். விட்டுக்கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்கவேண்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisements

Next Post

மதம் பிடித்த மனிதர்களின் உலகத்தில் மாற்று உயிரினங்கள் வாழ்வது மிகவும் கடினம் - அழியும் நிலையில் யானைகள்..!

Mon Aug 12 , 2019
நம் வாழ்வோடும் வளமோடும் இரண்டறக் கலந்து விட்ட யானைகள், தற்போது அழியும் நிலையில் உள்ளன. அவற்றைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.. குழந்தைக்கு குழந்தையாய், தோழனுக்கு தோழனாய், அமைதியாக உலா வருபவை யானைகள்… தங்கள் வசிப்பிடங்களான வனப் பகுதிகளை மனிதன் தன் பேராசையால் ஆக்கிரமிக்கும்போதும், துன்புறுத்தும்போதும்தான் யானைகள் உச்சகட்ட கோபம் கொள்கின்றன. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வீடுகளும், விடுதிகளும் கட்டப்படுவதால் யானைகளின் வழித்தடம் மறைக்கப்படுகிறது. […]
%d bloggers like this: