“டிரம்ப்”-ன் வாழ்நாளில் ‘கறுப்பு நாள்’ அதிபர் பதவி பறிபோகுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வாழ்நாளில் இன்று மிக மோசமான கறுப்பு நாள் என்று குறிப்பிடலாம். ஆம் அவருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றது அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த போகிறது. அமெரிக்க அரசியலில் இன்று மிக முக்கியமான திருப்பம் நிகழ்ந்து இருக்கிறது. அமெரிக்க அதிபருக்கு எதிராக வைக்கப்பட்ட அதிகார துஷ்பிரயோக புகார்கள் மீது அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை இன்று முக்கிய முடிவு எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரிய தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 179 பேர் வாக்களித்தனர்.

ஆனால் இந்த பதவி நீக்க தீர்மானம் பெரும்பாலும் செனட் சபையில் வெற்றிபெற வாய்ப்பு கிடையாது. செனட் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக பெரும்பான்மை இல்லை. இதனால் அங்கு டிரம்ப் எப்படியும் தப்பித்துக் கொள்வார். அங்கு டிரம்ப் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்.

அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் டிரம்பிற்கு பிரச்சனை இல்லை.

ஆனால் டிரம்பிற்கு இது மூன்று விதமான பிரச்சனைகளை ஏற்படுத்த போகிறது. முதல் பிரச்சனை இன்னும் ஒரு வருடத்தை அவர் முழுதாக ஆட்சியில் இருந்து கழிப்பது மிகவும் சிரமம். இதற்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பில் கிளிண்டன் , ஆண்ட்ரு ஜான்சன் ஆகியோர் இதே பிரச்னையை எதிர்கொண்டனர்.

அதேபோல் பெரும்பாலும் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படலாம். ஆம் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1974ல் தகுதி நீக்கம் செய்யப்படும் முன் பதவி விலகினார். அவர் பதவி நீக்க தீர்மானம் வெல்லும் என்று தெரிந்ததும் பதவி விலகினார். அதேபோல் டிரம்பும் விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்கும்.

இதனால் அடுத்த அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதும் சந்தேகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட முயன்று கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த தகுதி நீக்கம் காரணமாக டிரம்ப் பெரும்பாலும் அவரின் கட்சி சார்பாக மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்.

இன்னொரு பக்கம் டிரம்பிற்கு இது மிக மோசமான அவமானம் என்று குறிப்பிடுகிறார்கள். அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக மோசமான பட்டியலில் டிரம்ப் இடம்பிடித்துள்ளார். எப்போதும் இமேஜ் மீது கவனமாக இருக்கும் டிரம்ப் இதை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று தெரியவில்லை.

Advertisements

fogpriya

Next Post

3 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் சேர்க்க இருப்பதாக"சனம் ஷெட்டி"தகவல்..!

Fri Dec 20 , 2019
சனம் ஷெட்டி என்றவுடன் நமக்கு அவர் அளித்த சமீப பேட்டிகள் தான் ஞாபகம் வரும் அந்த அளவுக்கு அவர் காதலனான தர்ஷனுக்காக வெளியே நேர்காணல்களில் பேசியவர் சனம் ஷெட்டி. பெங்களூரை சேர்ந்த இவர் மாடலிங் மற்றும் நடிப்பை முன்னிலைபடுத்தி பணியாற்றி வருகிறார் . சனம் ஷெட்டி 2012ல் வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். தனது முதல் திரைப்படமே சவால் மிகுந்த படம் அதுவும் 3டி திரைப்படம் .அதில் […]

Actress HD Images

%d bloggers like this: