இளைஞர்கள் முயற்சியில்- முன்மாதிரி கிராமம் – சி.புதூர்

தர்மபுரி அருகே 200 குடும்பங்களே வசிக்கும் கிராமத்தில், நகரங்களுக்கு இணையாக சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிப்பதுடன், சிறப்பான அடிப்படை வசதிகளுடன் அசத்தி வருகிறது.
தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் வழியில் உள்ளது சி.புதூர் என்ற கிராமம். 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி திருட்டு, நகை பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்து வந்தன.
குற்றத்தை தடுக்க கிராமத்து இளைஞர்கள் ஒன்று கூடி, ஏ.பி.ஜெ. அக்னி சிறகுகள் நற்பணி மன்றத்தை தொடங்கினர். பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கிராமத்தைச் சுற்றிலும், முக்கிய வீதிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து கண்காணித்து வருகின்றனர்.


தெருவில் சந்தேகப்படும்படி யாராவது சென்றால் கூட உடனே இளைஞர்கள் சென்று கேள்வி கேட்டு விசாரித்து தான் அனுப்புகிறார்கள். மேலும் ஆங்காங்கே, குப்பை தொட்டி அமைத்து குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டாமல் சுகாதாரத்தை பேணி வருகிறார்கள். இதுபோல் மரக்கன்று நட்டும், மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த பள்ளியில் நூலகம் அமைத்தும், சுத்தமான குடிநீர் வசதியும் ஏற்படுத்தியுள்ளனர்.
இது தவிர விவசாயிகளின் களைப்பை போக்க ஊரின் நடுவே ஒலிபெருக்கி வைத்து பாடல்கள் மற்றும் செய்திகள் ஒலிபரப்பிவருகின்றனர். இதற்காக கடந்த 2017-18ம் ஆண்டு நேரு யுவகேந்திராவின் முன்மாதிரி கிராமத்துக்கான பரிசையும் பெற்றுள்ளது.
இதுபோன்ற சிறு தேவைகளுக்கு கூட அரசை எதிர்பார்க்கமால், இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் சாதிக்க முடியும் என எடுத்துக்காட்டியுள்ளதாக ஊர் பெரியவர்கள் பாராட்டுகிறார்கள்.

Advertisements

Next Post

பிளாஸ்டிக் சங்கத்திலிருந்து வெளியேறிய பெப்சி மற்றும் கோக்... காரணம் இதுதான்!

Sat Aug 10 , 2019
உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனங்களில் முக்கிய இடம் கோக கோலா மற்றும் பெப்சிக்கு உண்டு. இவற்றின் பானங்களின் விற்பனைக்காக பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அண்மையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பிளாஸ்டிக் தொழில் சங்கத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன இந்த இரு நிறுவனங்களும். என்ன காரணம்? “சங்கம் எங்கள் கடமைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் முழுமையாக ஒத்துப்போகவில்லை. […]
%d bloggers like this: