செப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் – சந்திரயான்-2

ஸ்ரீஹரிகோட்டா,
சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22 ம் தேதி ட சந்திராயன் – 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது.

3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன.இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 3:00 – 4:00 மணிக்குள், புவிசுற்றுவட்டப் பாதையைக் கடந்து, நிலவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்துள்ளது. வரும் 20ம் தேதியன்று சந்திரயான்-2, நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில் சந்திரயான் விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.


வரும் 20ம் தேதியன்று சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவைச் சுற்றத் தொடங்கியதும் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து சந்திரயான் 2 நிலவில் இறங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். திட்டமிட்ட படி, சந்திராயன்- 2 விண்கலம், செப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் என்று, இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
விக்ரம் எனப் பெயரிடப்பட்ட லேண்டர் நிலவில் இறங்கியதும் அதிலிருந்து பூமிக்கு சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கிவிடும்.


அதில் பொருத்தப்பட்டுள்ள ரோவர், நிலவில் ஊர்ந்து சென்று அதன் தன்மையை ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Next Post

தொடர்ந்து உயரும் தங்கம் விலை…. காரணம் என்னவாக இருக்கும்..?

Wed Aug 14 , 2019
தங்கம் விலை கடந்த சில நாட்களாக நினைத்த பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது .. மக்கள் அனைவருக்கும் எழும் சந்தேகம்.. தீடீரென தங்கம் விலை உயர காரணம் என்ன ? விலை குறைய வாய்ப்பு ஏதும் இருக்கிறதா ? இப்பொழுது தங்கம் வாங்கினால் லாபமா என்பதெல்லாம் தான்… இந்தியாவில் சேமிப்பு முறைகளில் முதன்மையாக கருத படுவது தங்கத்தில் தான் ….பெருவாரியான முதலீடுகள் தங்க நகைகள் மீது செய்யப்படுகிறது அப்படி […]

Actress HD Images

%d bloggers like this: