செம கல்யாணம்..! பட்டா கத்தியுடன் கேக் வெட்டிய மணமகன் மாமியார் வீட்டில் கைது..!!

சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலயின் திருமண விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது சர்ச்சையானது. இந்நிலையில் மணமகனை போலீசார் மாமியார் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். மணமக்கள் நின்ற மேடையில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டா கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக்கை வெட்ட சொல்லி பட்டா கத்தியுடன் நடனமும் ஆடினர்.

கடந்த வாரத்தில் இதே போன்று பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டிய இருவர் கைது கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்நிலையில் திருமண விழாவில் பட்டா கத்தியுடன் கேக் வெட்ட தூண்டிய மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போலீசார் கத்தியை கொண்டு கேக் வெட்டியக் காரணத்தால் புது மாப்பிள்ளையை மாமியார் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

Advertisements

Next Post

அட்லீயை கைவிட்ட விஜய்.. பெண் இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி.. அனல் பறக்கும் தளபதி 65 அப்டேட்..!!

Wed Jan 29 , 2020
தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில் தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறது என தளபதி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. அதற்கு காரணம் தளபதி விஜய் இதுவரை கிட்டத்தட்ட 10 முதல் 15 இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார் என்பது தான். தளபதி […]
%d bloggers like this: