சென்னையில் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..!

சென்னையில் அதிகாலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இரவிலும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை தொடங்கி சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம், கிண்டி, வடபழனி, அசோக் நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது.

சாலை ஓரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூரில் மழை வெளுத்து வாங்குகிறது. ஆம்பூரில் மோட்டுக் கொல்லை என்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. DNA சாலையில் மின்மாற்றி கவிழ்ந்ததில் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடியற்காலை 4 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பெய்துக்கொண்டிருக்கும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

புதுச்சேரியில் நள்ளிரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது.

Advertisements

Next Post

இதுவரை யாரும் சொல்லாத அத்திவரதரின் உன்மை வரலாறு | #AthiVaradhar | #Kanchipuram #fullongalatta

Sun Aug 18 , 2019
Advertisements
%d bloggers like this: