வாங்கிய விருதை திருப்பிக் கொடுத்த சேரன்… இதுதான் காரணமா?

பிக்பாஸ் 3 மூலம் மக்களிடம் நல்ல அறிமுகமான இயக்குனர் சேரன் தான் நடித்திருந்த படம் ஒன்றை விமர்சனம் செய்யாததால் தனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பி அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் எதார்த்தமான திரைப்படங்களை எடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த இயக்குனர் சேரன் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் தொடர் தோல்விகளால் சில ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்து வந்தார். அப்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு வரவே அதை ஏற்று உள்ளே சென்று பல சர்ச்சைகளில் சிக்கினார்.

அதன் பின் வெளியே வந்ததும் அவர் நடிப்பில் உருவான ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பற்றி நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை என்ற காரணத்துக்காக பிஹைண்ட்வுட்ஸ் தளம் தனக்குக் கொடுத்த ஐகான் ஆஃப் த இயர் என்ற விருதைத் திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் இரண்டு புதிய படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tue Feb 4 , 2020
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான லாஸ்லியா தற்போது நடிகையாக அவதாரமெடுத்துள்ளார். விஜய் டிவியில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இந்நிகழ்ச்சி அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியாவின் காதல் ரசிகர்களிடையே பேசுபொருளானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியாவுக்கு திரைத்துறையில் நல்ல […]

Actress HD Images

%d bloggers like this: