கோப்ரா அப்டேட்: நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ படம் தாமதமாவது ஏன்? என்ன சொல்கிறார்கள் படக்குழுவினர்….

நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ’கோப்ரா’ என்ற படத்தின் படப்பிடிப்பு ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு விக்ரம் செல்வதற்கு முன்னரே முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின்படி இந்த படம் கால தாமதமாகி கொண்டே வருகிறது.

இந்த படத்தில் விக்ரம் 15க்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடித்து வருவதால் ஒவ்வொரு கேரக்டருக்கும் காலதாமதம் ஆவதால் இந்த படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தவில்லை என கூறப்படுகிறது. எனவே ‘பொன்னின் செல்வன் படத்துக்கு விக்ரம் செல்வதற்கு முன்னரே ’கோப்ரா’முடிவடைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக விக்ரம் தாய்லாந்து செல்ல உள்ளார். அவர் பிப்ரவரி இறுதியில்தான் சென்னை திரும்புவார் என்றும் அதன் பின்னர் மார்ச் முதல் வாரத்தில் தான் ’கோப்ரா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஏற்கனவே இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

அனல் பறக்கும் "மாறா" தீம் பாடல்..! இப்ப நானும் வேறடா....கிட்ட வந்து பாருடா....

Tue Jan 21 , 2020
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர். நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக […]
%d bloggers like this: