அம்மா,அப்பா 2 பேருமே கஷ்டப்படறாங்க.. ஆனா என்னால தான்.. கடிதம் எழுதிவிட்டு.. தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி..!!!

“அப்பா, அம்மா ரெண்டு பேருமே கஷ்டப்படறாங்க.. ஆனா என்னாலதான் சரியா படிச்சு எக்ஸாம் எழுத முடியல” என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிவிட்டார் கீர்த்தனா! சென்னை திருவொற்றியூர் ரெயில் நிலையம் சாலையை சேர்ந்தவர் சாமுவேல். சென்னை குடிநீர் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்க்கிறார். இவரது 18 வயது மகள் கீர்த்தனா.. மணலி சேலைவாயலில் உள்ள ஒரு தனியார் காலேஜில் பிஎஸ்சிமுதலாம் படித்து வந்தார்.

காலேஜில் தேர்வு எழுதிவிட்டு, வீட்டுக்கு வந்த கீர்த்தனா. நேராக தன்னுடைய ரூமுக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார். ரொம்ப நேரமாக கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த பெற்றோர், கீர்த்தனா ரூமுக்குள் சென்று பார்த்தனர். அப்போது மகள் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் அலறி துடித்தனர். மகளை கட்டிப்பிடித்து கொண்டு இருவரும் கதறி அழுதனர். இவர்களின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. பிறகு உடனடியாக திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் கொடுக்கவும் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினர்.

போஸ்ட் மார்ட்டம் செய்ய சடலத்தை அனுப்பி வைத்த போலீசார் முதல்கட்டமாக கீர்த்தனாவின் அறையிலேயே சோதனை மேற்கொண்டனர். அப்போது கீர்த்தனா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றினையும் கைப்பற்றினர். அதில், “என் அப்பா, அம்மா ரொம்பவும் கஷ்டப்பட்டு என்னை படிக்கி வைக்கிறார்கள். ஆனால் நான்தான் எக்ஸாம் சரியாக எழுதவில்லை.. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று உருக்கமாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Advertisements

Next Post

2020 ஆம் ஆண்டு எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப் போகுது... பலன்கள்மற்றும் பரிகாரங்கள் என்ன தெரியுமா?

Mon Dec 30 , 2019
எண்கள் மனிதர்களின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கின்றன. ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம். 2020 ஆம் ஆண்டினை கூட்டும் போது கூட்டுத்தொகை 4 வருகிறது. இது ராகுவின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டு என்று சில எண்கணித நிபுணர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 1- 1 […]
%d bloggers like this: