யார் அடுத்த தலைவர்? … “ராகுல், பிரியங்கா, மன்மோகன்சிங்” – இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடுகிறது.
சோனியாகாந்தி, பிரியங்கா, அகமது பட்டேல், ஏகே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் , மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக இந்த தலைவர்கள் தனித்தனியாக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய தலைவராக யாரை தேர்வு செய்வது என்று விவாதித்துள்ளனர்.


நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகுல் வாஸ்னிக், சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின்பைலட் உள்ளிட்டோரின் பெயர்களை மூத்த தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மன்மோகன்சிங் அல்லது பிரியங்கா தலைமை ஏற்க வேண்டும் என்றும் சிலர் கோரி வருகின்றனர். இன்றைய காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisements

Next Post

வந்தாசு… டிஜிட்டல் சர்க்கஸ் - விஞ்ஞானத்தின் விந்தை

Sat Aug 10 , 2019
ஜெர்மனியில் ஹோலோகிராம் மூலம் இயக்கப்படும் சர்க்கஸைக் காண குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 250 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழமையான சர்க்கஸ் நிகழ்வு, விலங்குகள் பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளால் பெரும்பாலான நாடுகளில் முடிவுக்கு வந்தது. இதனால் அழிவின் விளிம்பில் உள்ள சர்க்கஸ் கலையை மீட்டெடுக்க ஹோலோகிராம் டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவுகிறது. யானை, குதிரை, குரங்கு, மீன் என அனைத்தையும் மெய்நிகர் காட்சியாக வடிவமைத்து 10 ஆயிரத்துக்கும் […]
%d bloggers like this: