பிரபல இந்தி பாடகிக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பாலிவுட் பட பின்னணிப் பாடகி கனிகா கபூருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவருடன் விருந்தில் கலந்துகொண்ட வசுந்தரா ராஜே, துஷ்யந்த் ஆகியோர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார்.

வெளிநாட்டிலிருந்து திரும்பிய கனிகா, லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார். தற்போது கனிகாவுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, வசுந்தராராஜே மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisements

Next Post

Sanitizer வாங்கக் குவியும் பொதுமக்கள் கூட்டம்... ஒரு பாட்டில் இவ்வளவு ரூபாயா? ஏமாற்றப்படும் மக்கள்!!

Sat Mar 21 , 2020
Advertisements
%d bloggers like this: