சீறு படத்தை தன் உள்ளங்கையில் வைத்து தாங்கி பிடித்துள்ள டி.இம்மானின் இசை..!!

நடிகர் ஜீவா நடிப்பில் ரத்னசிவா இயகத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சீறு தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் படத்தை தயாரித்து இருக்கிறார் .பிப்ரவரி7 வெளியாகியுள்ள படம் ரசிகர்களிடையே நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது . படம் பார்த்த பல ரசிகர்கள் அதிகம் கூறியது படத்தின் பின்னனி இசை பற்றி தான் .இந்த படம் ஜீவா மற்றும் டி.இம்மான் இனையும் மூன்றாவது படமாகும் .ஜீவாவின் மீட்டருக்கு ஏற்ற பாடல்களையும் பின்னனி இசையும் தெளிவான அளவில் கொடுத்திருக்கிறார் டி.இம்மான் .

றெக்க படத்தில் கண்ணம்மா பாடல் மூலம் ஒரு அழகிய பாடலை ரத்னசிவா கூட்டணியில் கொடுத்திருப்பார் டி.இம்மான், அதே மாதிரியான களத்திற்கு இந்த படத்தில் செவ்வந்தியே பாடலை கொடுத்திருக்கிறார் .டி.இம்மான் அறிமுகபடுத்தி இருக்கும் மற்றொரு பாடகரான கண்பார்வையற்ற திருமூர்த்தி தான் இந்த பாடலை பாடியிருக்கிறார் . படம் வெளியாவதற்கு முன்பே பல ரசிகர்களின் பிடித்தமான பாடலாக மாறியிருந்த செவ்வந்தியே பாடல் திரையில் வரும் போது ரசிகர்களின் ஆரவாரம் அளவே இல்லாமல் இருந்தது.

இந்த படத்தின் ஒரு காட்சியில் ஜீவா கதாநாயகியை பஸ் ஏற்றி விட்டு எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்க தயாராவார் ,அங்கிருந்து தான் கதையும் வெகு வேகமாக சூடுபிடிக்கும் அந்த இடத்தில் டி.இம்மான் அமைத்த பின்னனி கதையை மட்டுமின்றி ரசிகர்களையும் சூடேற்றியது என்றே சொல்லாம் . டி.இம்மான் பல நல்ல படங்களுக்கு நல்ல பின்னனி இசையை கொடுத்திருக்கிறார் இருந்தும் சில படங்களில் சொதப்பல்கள் ஏற்பட்டிருக்கும் ,ஆனால் சீறு படத்தை பொருத்த வரையில் பேசபடாத ஹீரோ என்றால் டி.இம்மானை சொல்லலாம். நேர்த்தியான பின்னனியில் படத்தை தன் உள்ளங்கையில் வைத்து தாங்கியிருக்கிறார் .

Advertisements

Next Post

"வானம் கொட்டட்டும் " திரைவிமர்சனம்..!!

Sat Feb 8 , 2020
ஒரு அழகான கிராமம் அதில் ஒரு அழகான குடும்பம் சரத்குமார், ராதிகா மற்றும் அவர்களின் குழந்தைகள் மற்றும் சரத்குமார் அண்ணன் அவரை ஒருவர் வெட்டி விடுகின்றனர். வயலிலே அவர் விழுந்து கிடக்கிறார் வெட்டப்பட்ட அரிவாளை சரத்குமார் மகன் எடுக்கிறான். சரத்குமார் மற்றும் ராதிகா குழந்தைகளுடன் கோவிலுக்கு செல்கின்றனர். அச்சமயம் சரத்குமார் மகன் சரத்குமாரிடம் வந்து அப்பா பெரியப்பா அங்கு வெட்டப்பட்டு விழுந்து கிடக்கிறார் என்று கூறுகிறான். சரத்குமார் உடனே கோபம் […]
%d bloggers like this: