கோவை-யில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.இடையில் கடந்த 18ஆம் தேதி புதிதாகத் திறக்கப்பட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சந்தோஷ்குமார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவனை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, சந்தோஷ்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்காக மரண தண்டனையும், தடயங்களை மறைத்ததற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். மேலும் சிறுமியின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாய் தர வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிறுமியின் உடலில் சந்தோஷ் குமாருடைய விந்தணுக்கள் மட்டுமல்லாது வேறு ஒரு நபரின் விந்தணுவும் இருந்ததாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளதால், பெண் அதிகாரி ஒருவரை நியமித்து, புலன் விசாரணை மேற்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே சந்தோஷ் குமார் விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Next Post

ரஜினியின் "தர்பார்" முதலில் ரிலீசாவது எந்த நாட்டில் தெரியுமா?

Sat Dec 28 , 2019
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் இந்தியாவில் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் ரிலீசாகிறது. தர்பார் திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் ஜனவரி 9ம் தேதி தர்பார் ரிலீசாகவுள்ள நிலையில், […]
%d bloggers like this: