மதம் பிடித்த மனிதர்களின் உலகத்தில் மாற்று உயிரினங்கள் வாழ்வது மிகவும் கடினம் – அழியும் நிலையில் யானைகள்..!

நம் வாழ்வோடும் வளமோடும் இரண்டறக் கலந்து விட்ட யானைகள், தற்போது அழியும் நிலையில் உள்ளன. அவற்றைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
குழந்தைக்கு குழந்தையாய், தோழனுக்கு தோழனாய், அமைதியாக உலா வருபவை யானைகள்…
தங்கள் வசிப்பிடங்களான வனப் பகுதிகளை மனிதன் தன் பேராசையால் ஆக்கிரமிக்கும்போதும், துன்புறுத்தும்போதும்தான் யானைகள் உச்சகட்ட கோபம் கொள்கின்றன.
வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வீடுகளும், விடுதிகளும் கட்டப்படுவதால் யானைகளின் வழித்தடம் மறைக்கப்படுகிறது. காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் இல்லாததால், மனிதர்கள் வசிக்கும் இடங்களை நோக்கி நகர்கின்றன.


உலகில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின் படி, ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகளும், ஆசியாவில் 55 ஆயிரம் யானைகளும் மட்டுமே இருக்கின்றன. வரைமுறையற்ற வேட்டையின் காரணமாக…இருக்கும் யானைகளும் தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடி தோற்று வருகின்றன.
காட்டிற்குள் பல்லுயிர்ச்சூழலை பாதுகாப்பதில் யானை மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விதைகளை பரப்புவதன் மூலம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து சோலைக் காடுகள் உருவாகக் காரணமாக அமைகிறது.
மழைக்கு காடுகள் அவசியம். காடுகள் மேலாண்மைக்கு யானைகள் மிக அவசியம். யானைகள் பாதுகாக்கப்பட்டால்தான் காடுகள் உயிர்ப்புடன் இருப்பதாக கருத முடியும். அப்போதுதான் மக்களும் நிறைவான வாழ்வை வாழமுடியும்.

Advertisements

Next Post

மலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..!

Mon Aug 12 , 2019
Advertisements

You May Like

%d bloggers like this: