பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரிக்க கோரி, தமிழக அரசு பதில் மனு

சமூகவலைதளங்களோடு ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி பேஸ்புக் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை நிராகரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது போன்ற விஷயங்கள் தனி மனிதரின் அந்தரங்கத்தில் குறுக்கிடும் செயல் என கூறி பேஸ்புக் நிறுவனம் வாதிட்டது.

அதேபோல் வாட்ஸ்அப் செயலி குறித்து உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளும் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என வாதிடப்பட்டது. ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தின் சட்டவரம்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியிருந்தார்.

சமூகவலைதளங்கள் தொடர்பான பொதுநலன் மனு கடந்த 18 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாக தெரிவித்த அவர், உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிக்க கூடாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதிகள், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர்.

அதேபோல் மத்திய அரசு மற்றும் கூகுள், டுவிட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களும், செயலிகளின் நிர்வாகமும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட கருத்துக்கள், வாதங்கள், உண்மைகளை மறைத்து பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அரசு குற்றஞ்சாட்டியது.

Advertisements

Next Post

சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ரத்தம் குடிக்க துடிக்கிறீர்களா - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Fri Sep 13 , 2019
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம் ஒரு உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி பேனர் விவகாரத்தில் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை பலி வாங்க துடிக்கிறீர்கள்? – உயர்நீதிமன்றம் சட்டவிரோத பேனர்களை ஒழிக்கும் விவகாரத்தில் இன்னும் எவ்வளவு ரத்தம் தேவைப்படுகிறது – உயர்நீதிமன்றம் கேள்வி சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ரத்தம் குடிக்க துடிக்கிறீர்களா எனவும் […]
%d bloggers like this: