பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை.. மகளின் “ஆத்மா சாந்தியடையும்” பிரியங்காவின் தந்தை நெகிழ்ச்சி..!

கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவா,சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்தது.குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணியில் நடத்தினர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை குற்றம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்த போலீசார் நான்கு பேரையும் அழைத்துச் சென்றனர்.தேசிய நெடுஞ்சாலை 44 ல் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது காவலர்களை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

இதற்கிடையே, பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற, நால்வரையும், தெலங்கானா போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றிருப்பதை, கல்லூரி மாணவிகள் வரவேற்றுள்ளனர். இன்று காலை கல்லூரிக்குச் சென்ற மாணவிகள், போலீசார் பார்த்து உற்சாக முழக்கங்களை எழுப்பி, பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர். இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட கால்நடை பெண் மருத்துவரின் தந்தை, கைதான 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமது மகள் இறந்த 10 நாட்களில், குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

தெலங்கானா அரசுக்கும், காவல்துறைக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், கூறியிருக்கிறார். தமது மகளின் ஆன்மா, தற்போது சாந்தியடையும் என்றும், கால்நடை பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்திருக்கிறார்.தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்தவர்களை சுட்டுக் கொன்றது தவறில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

அந்தப் பிரச்சினையால் நானும் பாதிக்கப்பட்டேன் பிரபல நடிகை..!

Fri Dec 6 , 2019
மன அழுத்தம் காரணமாக தான் பலமுறை கதறி கதறி அழுததாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். இன்றைய ஸ்மார்ட் ஃபோன் உலகில் சிறுவர்கள் மூலம் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படும் பிரச்சினை மன அழுத்தம். இந்த துறை தான் என்றில்லாமல், எல்லாத்துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. குறிப்பாக சினிமாவில் மன அழுத்தப் பிரச்சினை அதிகம் உள்ளது. பல நடிகர், நடிகையர் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்வது பற்றிய […]

Actress HD Images

%d bloggers like this: