பெண் பாலியல் வன்கொடுமை- எரித்துக்கொலை..!

பீகார் மாநிலம் சாம்பரன் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் விவசாய நிலத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தார். பின்னர் சமையல் செய்ய வேண்டும் என தாய் மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மகள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கையில் அதே ஊரைச் சேர்ந்த அர்மான் என்ற நபர் அப்பகுதிக்கு வந்துள்ளார். அவர் அப்பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய அப்பெண் தனக்கு நேர்ந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார்.ஆனால் அவரின் கணவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அந்த ஊரில் யாரும் கேட்காததால் இளம்பெண்ணிற்கு அர்மான் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.


இந்த சூழலில் கடந்த திங்கள் அன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் அர்மானை சந்தித்துள்ளார்.அப்போது தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். வரும் செவ்வாய் அன்று காலை பெண்ணின் மூத்த சகோதரன் ஊர் திரும்பி விடுவார் என்றும், அப்போது ஊர் பெரியவர்களிடம் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.இதற்கு ஒப்புக்கொள்வது போன்று நடித்த அர்மான், மறுநாளே அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 70 % தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட அப்பெண் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைக்கழிக்கப்பட்டார்.இறுதியாக பாட்னா மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல முடிவெடுத்தனர். பின்னர் அப்பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு ஹாஜிபூர் அருகே சென்ற போது அப்பெண் உயிரிழந்தார். இதனால் அப்பெணிண் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் குற்றவாளி அர்மானை கைது செய்து கடும் தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisements

fogpriya

Next Post

ரொமான்டிக் ரவுடியாக "யோகி பாபு"- படம் 50/50

Thu Dec 12 , 2019
தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு அவ்வப்போது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் ஹீரோவாக நடித்த தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதுயோகி பாபு நடித்து வரும் படங்களில் ஒன்றான 50/50 என்ற திரைப்படத்தில் தான் அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், […]

You May Like

%d bloggers like this: